சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போச்சு.. முறிகிறது உறவு.. சிதறுகிறது கட்சி.. வாசனுக்கு என்னாச்சு?.. திமுகவை "கவனிக்கும்" மாஜிகள்!

தமாகா நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: தமாகாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகிறார்கள்.. இதையடுத்து, இவர்கள் எல்லாம் திமுக பக்கம் தாவ போகிறார்களோ என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.

தமிழ் மாநில சம்பந்தமான பூசல்கள் எப்போதுமே அவ்வளவாக வெடிக்காது.. நிர்வாகிகளுக்குள் இணக்கமான போக்கே நிலவி வரும்..

மதன் ஆடிய ஆட்டம் என்ன.. இப்போ போச்சா.. 2 ஆடி கார்கள் பறிமுதல்.. வங்கியிலுள்ள 4 கோடி முடக்கம் மதன் ஆடிய ஆட்டம் என்ன.. இப்போ போச்சா.. 2 ஆடி கார்கள் பறிமுதல்.. வங்கியிலுள்ள 4 கோடி முடக்கம்

காரணம், ஜிகே வாசனின் அணுகுமுறை மிகவும் மென்மையானது.. நாகரீகமானது.. அதனால்தான் ஜிகே வாசனை மற்ற கட்சி தலைவர்களுக்கும் அதிகமாகவே பிடிக்கும்... மூப்பனாரின் வளர்ப்பு அப்படி..!

வாசன்

வாசன்

ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் தமாகாவில் உட்பூசல் வெடித்தது.. தமாகாவிலிருந்து கோவை தங்கம் இதற்கான பிள்ளையார் சுழியை போட்டார்.. வால்பாறை சட்டமன்ற தொகுதி தனக்கு கிடைக்காததாலும், வேறு சில காரணங்களாலும் துணைதலைவராக இருந்த கோவை தங்கம் தமாகாவில் இருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 கோவை தங்கம்

கோவை தங்கம்

அத்துடன் கோவை தங்கம் திமுகவில் இணைந்தது அதைவிட ஷாக் தந்தது. அதேபோல, கோவை தங்கம் முன்னிலையில் ராம்குமார், அவரது ஆதரவாளர்களும் இணைவதாகவும் தகவல்கள் வெளியவந்தன. இப்படித்தான் ஞானசேகரனுக்கும் ஜிகே வாசனுடன் பிரச்சனை ஏற்பட்டது.. மூப்பனார் தமாகாவை தொடங்கிய போது, அப்போதிருந்தே முக்கிய ஸ்தானத்தை பெற்றவர் ஞானசேகரன்.. சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்...

 கருணாநிதி

கருணாநிதி

சட்டசபை விவாதங்கள் என்றாலே ஞானசேகரன் தான் ஸ்பெஷல் நபர்.. மறைந்த கருணநிதி இவருடைய சட்டசபை செயல்பாடுகளை பலமுறை பாராட்டி பேசியிருக்கிறார்.. தமாகா இணைந்த போதும் சரி, வாசன் தனியாக தமாகாவை ஆரம்பித்த போதும் சரி, அவருடனேயேதான் முக்கிய நபராக வலம் வந்தார். ஞானசேகரன் திமுகவுக்கு சென்றபோதும்கூட சரி, தொகுதியில் இவருக்கு செல்வாக்கு தொடர்ந்து இருந்து வந்தது... இந்த முறை சீட் தராதது காரணமாக இவரும் கட்சியில் இருந்து விலகி ஷாக் தந்தார்.

 ராம்குமார்

ராம்குமார்


இப்போது, மத்திய சென்னை மேற்கு மாவட்ட தமாகா தலைவர் அண்ணாநகர் ராம்குமாரும் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்... இவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக வாசனும் சூட்டோடு சூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டார்.

 விளக்கம்

விளக்கம்

அந்த அறிக்கையில், "மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ராம்குமார் கட்சியின் விதிகளுக்கு மாறாக செயல்பட்டதால் உடனடியாக மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக சென்னை மாமன்ற முன்னாள் உறுப்பினர் கோவிந்தசாமி மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் (பொறுப்பு) ஆக நியமிக்கப்படுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

தோல்வி

தோல்வி

நடந்து முடிந்த தேர்தலில் தமாகாவுக்கு 2 சீட்தான் தருவதாக அதிமுக கணக்கு போட்டிருந்தது.. ஆனால், 12 சீட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் வாசன்.. இறுதியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன... இந்த 6 இடங்களில் யார் நிற்பது என்பதுதான் மூத்த தலைவர்களுக்குள் போட்டி ஏற்பட்டு, கட்சியில் இருந்து விலகும் சூழல் அடுத்தடுத்து ஏற்பட்டது.. இதில் அதிர்ச்சி சோகம் என்னவென்றால், அந்த 6 தொகுதியிலுமே தமாகா மண்ணை கவ்வியதுதான்.

 திமுக?

திமுக?

இதைவிட இன்னொரு ஹைலைட், பதவிகளை ராஜினாமா செய்துவரும் நிலையில், இவர்கள் எல்லாம் திமுகவில் இணைவார்கள் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் கசிந்து வருகிறது.. இந்த 2 மாத காலத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் மாற்று கட்சியினரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இருந்து வந்தாலும், தமாகாவுக்கு இது பெருத்த சறுக்கலாகவே உள்ளது.. தமாகா சிதறி கொண்டிருக்கிறது.. வாசனுக்கு என்னதான் ஆச்சு?!

English summary
Senior executives resign from TMC due to Local Politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X