சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வாழும் வரை எழுதுவேன்.. எழுதும் வரை வாழ்வேன்".. மூத்த பத்திரிகையாளர் "காகிதம்" ராஜன் திடீர் மரணம்

Google Oneindia Tamil News

சென்னை: மூத்த பத்திரிகையாளர் பி.ராஜன் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 64! மீடியா உலகமே அதிர்ந்து கிடக்கிறது.. இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.. பி.ராஜன் மரணத்தையும் ஜீரணிக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 40 வருஷங்களுக்கு மேல் பத்திரிகை துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர் ராஜன்.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கோடைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்..

Senior journalist p rajan dies of a heart attack

நமது எம்ஜிஆர், மாலை தமிழகம், தமிழ் ஒளி, ஜெயா டிவியில் வேலை பார்த்தவர்.. அங்கு தனது பங்களிப்பை அர்ப்பணிப்பாக அளித்தவர்.

தமிழக சபாநாயகராக இருந்த டாக்டர் காளிமுத்துவிடம் பிஏ-வாக பணியாற்றியவர்... சட்டக்கேடயம் என்ற பத்திரிகை ஆசிரியரும்கூட.. இவர், காகிதம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.. அதனால் இவரை காகிதம் ராஜன் என்றும் சொல்வார்கள். "வாழும் வரை எழுதுவேன்.. எழுதும் வரை வாழுவேன்...காகிதம் வெல்லும்.. அதை காலம் சொல்லும்" என்று சொல்லி கொண்டே இருந்தவர்.

பழகும் விதமும் அலாதிதான்.. எல்லோரிடமும் யதார்த்தமாக பேசுவார்.. இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது.. அதனால் குடும்பத்தினர் பதறி போய் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. இந்த மரண செய்தி தமிழக பத்திரிகை உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

இன்று நடக்கிறது இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாடு.. உரையாற்றுகிறார் நரேந்திர மோடி.. உறவு பலமாக வாய்ப்புஇன்று நடக்கிறது இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாடு.. உரையாற்றுகிறார் நரேந்திர மோடி.. உறவு பலமாக வாய்ப்பு

சென்னை நிருபர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்... இவரது மறைவுக்கு நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட், பப்ளிக் ஜஸ்டிஸ் உள்ளிட்ட சங்கங்கள், அமைப்புகள் இரங்கலை தெரிவித்து வருகின்றன.

பப்ளிக் ஜஸ்டிஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காகிதம் ராஜன் அவர்கள் மாரடைப்பால் மரணம் வாழும் வரை எழுதுவேன்.. எழுதும் வரை வாழுவேன்... காகிதம் வெல்லும்.. அதை காலம் சொல்லும்.. உடல் மண்ணுக்கு... உயிர் PEN க்கு... என்று வாழ்ந்து காட்டியவர் இறுதி மூச்சு வரை பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்.

அனைவரிடமும் எளிமையாக பழகும் குணம் படைத்தவர். பத்திரிகைத்துறை சிறந்த மனிதரை இழந்துள்ளது அவரது ஆத்மா இறைவன் திருவடியில் அமைதியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளது.

மறைந்த ராஜனுக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.. இவர்களில் 2 மகள்களுக்கு கல்யாணமாகிவிட்டது.. சோஷியல் மீடியாவில் ராஜனுக்கு அனுதாபங்களும், இரங்கலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.. இன்னும் கொஞ்சம் காலம் இவர் இருந்திட கூடாதா? என்ற கேள்விகளுடன் கண்ணீர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன!

English summary
Senior journalist p rajan dies of a heart attack
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X