சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்புமணிக்குப் பிடிக்கவே இல்லையாம்.. கட்டாயப்படுத்தி எம்பி ஆக்கிய பாமக!

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தர என்ன காரணம் தெரியுமா? - வீடியோ

    சென்னை: ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வருவதில் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு சுத்தமாக விருப்பமே இல்லையாம். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதால்தான் ஒத்துக் கொண்டாராம்.

    மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக சார்பில் தலா 2 வேட்பாளர்களும், மதிமுக, பாமக சார்பில் தலா 1 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

    மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வி அன்புமணிக்கு மனதளவில் மிகுந்த கவலையை அளித்துள்ளது.

    குமாரசாமி கெளம்புங்க.. எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள் போராட்டம் குமாரசாமி கெளம்புங்க.. எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள் போராட்டம்

    அன்புமணியின் யோசனை

    அன்புமணியின் யோசனை

    கூட்டணி விவகாரத்தில் அவசரப்பட்டதால் ஏற்பட்ட விளைவோ என்கிற ரீதியில் அன்புமணி யோசனை செய்தாராம். இதனிடையே கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு சீட் அதிமுக ஒதுக்கியதை அடுத்து, பாமக சார்பில் அன்புமணி போட்டியிடுவார் எனக் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டார்.

    விருப்பமே இல்லை

    விருப்பமே இல்லை

    ஆனால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அன்புமணிக்கு விருப்பமே இல்லையாம். அதிமுக கொடுத்த இடத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் தயவில் எம்.பி.யானால் நாளை அவர்களை பற்றி எப்படி விமர்சித்து பேச முடியும் என நினைத்தாராம்.

    செம அப்செட்

    செம அப்செட்

    மேலும், தேர்தல் முடிவு வெளியானதில் இருந்தே அப்செட் மூடில் இருக்கும் அன்புமணியை கட்சியினர் தான் நிர்பந்தித்து, வலியுறுத்தி ராஜ்யசபா எம்.பி.யாக வலியுறுத்தினார்களாம்.

    ஏகே மூர்த்தியும் ஜிகே மணியும்

    ஏகே மூர்த்தியும் ஜிகே மணியும்

    பாமக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேறு யாருக்காவது வாய்ப்பு தரும் திட்டத்தில் இருந்த அன்புமணியை, ஏ.கே.மூர்த்தி, ஜி.கே.மணி, உள்ளிடோர் வற்புறுத்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார்கள். இப்படித்தான் அன்புமணி வேட்பாளரானாராம்.

    கட்சியை வளர்க்கலாம்

    கட்சியை வளர்க்கலாம்

    இருப்பினும் தற்போது கிடைத்துள்ள இந்த எம்பி வாய்ப்பின் மூலமாக தர்மபுரிக்கு மட்டுமல்லாமல் பாமகவின் வாக்கு வங்கி உள்ள பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அன்புமணி உறுதிபூண்டுள்ளாராம். கட்சி வளர்ச்சிக்கு இந்த எம்பி பதவி உதவும் என்ற நம்பிக்கையும் அவருக்கு வந்துள்ளதாம்.

    English summary
    PMK Senior leaders forced Anbumani Ramadoss to accept the RS seat from the AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X