சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி!!

Google Oneindia Tamil News

சென்னை: ''திமுக vs பாஜக குறித்து எதையும் கூற நான் விரும்பவில்லை. திமுகவில் பதவிதான் அனைத்தையும் தீர்மானிக்கும். மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவது நடந்தே தீரும். இத்துடன் பதவி மட்டும் தான் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கூறி விட முடியாது. என கூற முடியாது. தேர்தலுக்குப் பின்னர் மேலும் பல இன்னல்களை சந்திக்கும் என்று தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் முக அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுச் செயலாளராக இருந்த விபி துரைசாமி வெளியேறி பாஜகவில் இணைந்தார். தனக்கு ராஜ்ய சபா எம்.பி. கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டார். இதனால், விபி துரைசாமி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. திமுகவில் மூன்று பொதுச்செயலாளர்கள் பொறுப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது. இவரும் பொதுச் செயலாளராக இருந்தார். இவருக்கு பாஜகவுடன் தொடர்பு இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிய வர, திமுக இவரிடம் இருந்து பொதுச்செயலாளர் பொறுப்பை பறித்து அந்தியூர் செல்வராஜிடம் வழங்கியது. இதையடுத்து பாஜகவில் விபி துரைசாமி ஐக்கியமானார்.

Senior Leaders will leave DMK says MK azhagiri amid Tamil Nadu politics

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்குப் பின்னர் தனக்கு கட்சியில் செல்வாக்கு இல்லை என்று கூறினார். இவர் திமுக ஆட்சியின்போது 2006 - 2011ல் சபாநாயகராகவும் பதவி வகித்து வந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். பாஜகவின் தமிழக தலைவராக இருக்கும் எல். முருகனும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் எல். முருகன் இதுவரை எதுவும் பேசவில்லை. ஆனால், பேட்டியளித்து இருந்த விபி துரைசாமி, ''பாஜக தேசிய கட்சி. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி. தமிழகத்தில் இனி பாஜக vs திமுக என்ற நிலை ஏற்படும். எங்களுடன் அனுசரித்து செல்பவர்களுடன் தான் கூட்டணி அமைக்கப்படும்" என்று அதிரடியாக தெரிவித்தார்.

அதிமுக ஒரு பக்கம் தினமும் உள்கட்சி பூசலை உருவாக்கி வருகிறது. மறுபக்கம் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பாஜக முயற்சிக்கிறது என்றே பார்க்க முடிகிறது. அதிமுகவை தூண்டிவிட்டு பாஜக வேடிக்கை பார்க்கிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு எதிராக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து இருந்தார். அமைச்சர் ஜெயக்குமாரும் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அவரது சொந்தக் கருத்து. கட்சியின் கருத்து அல்ல என்று தெரிவித்துள்ளார். கட்சி சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எடுப்போம்'' என்று தெரிவித்து இருந்தார். செல்லூர் ராஜூ சொன்னதையேதான் ஏறக்குறைய ஜெயக்குமாரும் சொன்னார். அதிமுகவிலும் குழப்பமா என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எப்போது வரை தொடரும்.. தலைமை செயலாளர் அளித்த பதில்தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எப்போது வரை தொடரும்.. தலைமை செயலாளர் அளித்த பதில்

இந்தக் கருத்தை சொன்னால் அரசியல் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக, விபி துரைசாமியை விட்டு எல். முருகன் பேச வைத்து இருக்கலாம். ஆதலால்தான், சிறிது நேரத்திலேயே அதிமுகவுடன் கூட்டணி என்று எல். முருகன் கூறுகிறார். தேவையில்லாமல், இவருக்கு முன்பாக விபி துரைசாமி கூறியிருக்க வேண்டிய அவசியம் என்ன. உள் அர்த்தம் என்ன. அதிமுகவை உடைத்துப் பார்க்கும் வேலையில் தமிழக பாஜக இறங்குகிறதா என்ற சதேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இன்று தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் அமைச்சருமான முக அழகிரி, ''திமுக vs பாஜக குறித்து எதையும் கூற நான் விரும்பவில்லை. திமுகவில் பதவிதான் அனைத்தையும் தீர்மானிக்கும். மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவது நடந்தே தீரும்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Senior Leaders will leave DMK says MK azhagiri amid Tamil Nadu politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X