சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    கரூர்: செந்தில் பாலாஜி எப்போது தூக்கில் தொங்குவார்? செய்தியாளர்களே கேட்டு சொல்லுங்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    சென்னை: தற்போது திமுக உறுப்பினராக உள்ள அரவக்குறச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தூக்கில் தொங்கினால் நான் உடனே எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ஜெயலலிதா மறைவிற்கு பின் டிடிவி தினகரனின் பின்னால் சென்றார் அதிமுக உறுப்பினராக இருந்த செந்தில் பாலாஜி இடையில் டிடிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

    Senthil Balaji after being hanged am resign... Transport Minister Vijayabaskar

    இதனையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த சட்டபேரவை இடைதேர்தலில் திமுக வேட்பாளாராக செந்தில் பாலாஜி போட்டியிட்டார். அவரை தோற்கடிக்க அரசு இயந்திரம் கடும் முயற்சி செய்து வந்தது. முதல்வரின் நேரடி பொறுப்பில் இருந்த தொகுதிகளில் இதுவும் ஒன்று என்பதால் அமைச்சரவையே இங்கு இறங்கி வேலை செய்தது என்று கூறலாம்.

    தமிழக மக்கள் மீதான கிரண்பேடியின் விமர்சனம் அகங்காரம்,ஆணவத்தின் வெளிப்பாடு.. ஸ்டாலின் தாக்கு தமிழக மக்கள் மீதான கிரண்பேடியின் விமர்சனம் அகங்காரம்,ஆணவத்தின் வெளிப்பாடு.. ஸ்டாலின் தாக்கு

    குறிப்பாக அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், அன்பழகன், உட்பட 10 அமைச்சர்கள் கொண்ட குழு செந்தில் பாலாஜியை தோற்கடிக்க கடும் முயற்சி மேற்கொண்டது.

    இதில் செந்தில் பாலாஜியின் நேரடி அரசியல் எதிரியான போக்குவரத்து துறை அமைச்சரும் உள்ளூர் அமைச்சருமான விஜயபாஸ்கர் பகீரத பிரயத்தனம் செய்தார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய விஜயபாஸ்கர் "செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வேன், என்றும், இல்லை என்றால் என் பதவியை ராஜினாமா செய்வேன்" என்று சவால் விடுத்திருந்தார்.

    இறுதியில் 37,824 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜியே அரவக்குறிச்சி தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதும் செய்தியாளர்களை சந்தித்த அவர் கேட்ட முதல் கேள்வியே"நான் வெற்றி பெற்றால் ராஜினாமா செய்வதாக கூறிய விஜயபாஸ்கர் எப்போது ராஜினாமா செய்வார் " என்று கேட்டு சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மீண்டும் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது இந்த கேள்வியால் கடுப்பான அமைச்சர் விஜயபாஸ்கர், "செந்தில் பாலாஜி எதற்கெடுத்தாலும், செய்தியாளர்களை கேட்டு சொல்லச் சொல்கிறார். நான் எப்போது பதவி விலகுகிறேன் என்றும் கேட்கச் சொல்லியுள்ளார்.

    அமமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி வெற்றிபெற்றால் அரசியலிலிருந்து விலகத் தயார் என்று கூறியது உண்மைதான். செந்தில் பாலாஜி கூடத்தான் தினகரனை முதல்வராக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவேன் என்று சொல்லியிருக்கிறார். அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் எப்போது தூக்குப்போட்டுக் கொள்கிறார் என்று. அப்போது நானும் பதவி விலகுகிறேன்" என்று ஆவேசமாக பதில் அளித்து விட்டு சென்றார்.

    English summary
    Transport Minister MR Vijayabaskar has said he would resign from his post as soon as the DMK member, Senthil Balaji, hangs up.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X