சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய 18 பேர்.. அதில் நீந்தி கரை சேர்ந்தவர் ஒருவரே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019: பரிதாபம்!..ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக- வீடியோ

    சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சென்று சின்னாபின்னமான 18 எம்எல்ஏக்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது அமமுக கட்சியினரை வேதனையடைய செய்துள்ளது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் எம்எல்ஏக்கள் ஆனவர் அதை மறந்து, அவர் இறப்புக்கு பின்னர் கட்சியில் பிளவு, சேர்ப்பு என ஏராளமாக நடந்ததை இந்த மக்கள் அறிவர். அந்த வகையில் ஓபிஎஸ்ஸை எதிர்க்கிறேன் பேர் வழி என கூறிக் கொண்டு தினகரனுக்கு ஆதரவாக 18 பேர் செயல்பட்டனர்.

    விளைவு 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றும் ஒன்று ஆகவில்லை. இதையடுத்து தேர்தலை சந்திப்போம் என இடைத்தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் அதற்கு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் எம்எல்ஏவாகிவிட்டார்.

    இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!

    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரும், தினகரனுக்கும் அனைத்துமாகயிருந்தவருமான செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவினார். இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் கடந்த ஏப் 18-ஆம் தேதியும் மே 19-ஆம் தேதியும் நடைபெற்றது.

    வொர்க் அவுட்

    வொர்க் அவுட்

    இதில் 18 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களையும் மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு வேறு வேட்பாளர்களையும் தினகரன் இறக்கினார். அதிமுக, திமுக, பாஜகவுக்கு எதிராக எத்தனையோ பிரச்சாரம் செய்தும் அமமுகவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை.

    இமாலய வெற்றி பெற்ற பாஜக.. வாழ்த்து சொன்ன ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி சொன்ன பதில்!இமாலய வெற்றி பெற்ற பாஜக.. வாழ்த்து சொன்ன ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி சொன்ன பதில்!

    17 பேர் பாதிப்பு

    17 பேர் பாதிப்பு

    நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதிலிருந்து தினகரனை நம்பி சென்ற மீதமுள்ள 17 பேரின் எம்எல்ஏ பதவி புஸ்ஸாகிவிட்டது. இன்று அதிமுகவினரின் அனுதாபத்தை இந்த 17 பேரும் பெறும் நிலை ஏற்பட்டது.

    அமமுக பாராட்டு

    அமமுக பாராட்டு

    செந்தில் பாலாஜியோடு சேர்ந்து இவர்களும் கட்சி தாவியிருக்கலாம் என கருதுவதாகவே அமமுக வட்டாரங்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டு நீந்தி கரை சேர்ந்த செந்தில் பாலாஜியின் செயல்பாட்டை அமமுகவினரே பாராட்டி வருகின்றனர்.

    போதும்.. அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இந்த முறை ஷாக் கொடுப்பது திமுக அல்ல அதிமுக!போதும்.. அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இந்த முறை ஷாக் கொடுப்பது திமுக அல்ல அதிமுக!

    English summary
    Senthil Balaji is the one and only winner among disqualified MLAs only because of his switched in to DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X