சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்பழகன் பேரனுக்கு ராஜ்யசபா எம்பி பதவியா? திமுகவில் சலசலப்பு?.. எம்பி செந்தில்குமார் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பேராசிரியர் க அன்பழகனின் பேரன் வெற்றிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்படும் என்ற தகவலை தருமபுரி எம்பி மறுத்துள்ளார். மாநிலங்களவை எம்பி பதவிக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பேராசிரியர் அன்பழகனுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையிலான ஆழமான நட்பு

    தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, விஜிலா சத்தியானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, டிகே ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

    ராஜ்யசபா தேர்தல்.. அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க தாமதம் ஏன்.. பரபரப்பு காரணம் ராஜ்யசபா தேர்தல்.. அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க தாமதம் ஏன்.. பரபரப்பு காரணம்

    தலா 3 எம்பிக்கள்

    தலா 3 எம்பிக்கள்

    ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வீதம் அதிமுக, திமுக தலா 3 எம்பிக்களை தேர்வு செய்து கொள்ளலாம். தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் மார்ச் 6ம் தேதி (இன்று) முதல் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுக, திமுகவுக்கு தலா 3 எம்பிக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

    பேராசிரியர் க அன்பழகன் மறைவு

    பேராசிரியர் க அன்பழகன் மறைவு

    இந்த நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தியூர் செல்வராஜுக்கும் என் ஆர் இளங்கோவுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேராசிரியர் க அன்பழகன் நேற்றைய தினம் காலமானார்.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    இந்த நிலையில் அவரது பேரன் வெற்றிக்கு மாநிலங்களவை பதவி கொடுக்க ஸ்டாலின் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக திருச்சி சிவா தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக் கொடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

    தனிப்பட்டகருத்து

    இதற்கு திமுக எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களின் பட்டியலை திமுக ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இது போன்ற பொய்யான ஆதாரப்பூர்வமற்ற தகவல்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன என தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரையில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK MP Senthil kumar says that there is no change in 3 Rajya Sabha candidates list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X