"அப்படி போடு".. அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் கடுமையான நடவடிக்கை.. தமிழக அரசு அதிரடி
சென்னை: முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது தமிழக அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது 2வது திருமணம் செய்யலாமா என்பது குறித்த விவகாரம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல, அரசு ஊழியர்கள் திருமணம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த விவகாரமும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! தொழில்துறையின் இலக்கை அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

தேன்மொழி
2 வருடங்களுக்கு முன்பு, ஒருமுறை தேன்மொழி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனு செய்திருந்தார்.. அதில் அரசு ஊழியரான தன்னுடைய கணவர், முதல் திருமணத்தை மறைத்துவிட்டு, 2வது திருமணம் செய்து கொண்டதாகவும், நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது நீதிபதி தன்னுடைய கருத்தை அப்போது தெரிவித்திருந்தார்.

2 திருமணங்கள்
"இரு திருமணங்களை புரிவது, நன்னடத்தை ஆகாது. இது சட்டப்படி குற்றமும் கூட. ஆனாலும் பல அதிகாரிகள், இதனை கருத்தில் கொள்ளாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்கின்றனர். காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இரண்டாம் திருமணம் தொடர்பான பிரச்சினையை சமரச தீர்வு மையம் தீர்த்து வைத்தது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. இது போன்ற பிரச்சினைகள் தெரிய வருகையில் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

தமிழக அரசு
இப்படி எத்தனையோ வழக்குகள், விசாரணைகள் நடந்து வந்த நிலையில்தான், தமிழக அரசு அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது... இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அரசாணையே பிறப்பித்துவிட்டது.. துணை உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இரண்டாம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

2வது திருமணம்
மேலும் 2வது திருமணம் செய்வது என்பது ஒழுக்கக் கேடானது, அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்று கூறியுள்ள தமிழக அரசு, அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்தால் சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.