• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

குளித்து விட்டு வந்த கலையரசி.. பாத்ரூம் வாசலிலேயே கட்டிப்பிடித்த போலீஸ் கண்ணன்.. கொந்தளித்த மக்கள்!

|

பெரம்பூர்: குளிச்சி முடிச்சிட்டு.. பாத்ரூமில் இருந்து வெளியே வந்த கலையரசியை கட்டிப்பிடிச்சு, கையையும் பிடித்து இழுத்து செக்ஸ் டார்ச்சர் தந்துள்ளார் போலீஸ்காரர் கண்ணன்!

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் கண்ணன்... இவர், வேப்பேரியில் போலீசாக இருக்கிறார்... அதாவது போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் தலைமை காவலர் ஆவார்.

இவர் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கலையரசி.. 30 வயதாகிறது.. சம்பவத்தன்று சாயங்காலம் கலையசி குளித்துவிட்டு வெளியே வந்தாராம்.. அப்போது, அங்கே மறைந்திருந்த கண்ணன், திடீரென கலையரசி கையை பிடிச்சு இழுத்து, பாலியல் தொந்தரவும் செய்தாராம்.

மாஸ்க் எங்கே? ஜடேஜா வண்டியை நிறுத்திய லேடி கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதி.. பரபரப்பு!

கலையரசி

கலையரசி

இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசி, அன்றைய தினம் இரவு கணவன் செல்வக்குமார் வந்ததும் எல்லாத்தையும் சொல்லி அழுதார்.. உடனே செல்வகுமாரும், அவரது அம்மாவும் சென்று கண்ணனை கண்டித்துள்ளனர்... அப்போதுதான் "நான் யார் தெரியுமா.. என்னை கேள்வி கேக்குறீங்களா?" என்று கேட்டு 2 பேரையுமே அடித்து தாக்கி உள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள்.

லீலைகள்

லீலைகள்

அதன்பேரில், செம்பியம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்... அப்போதுதான் கண்ணனின் லீலைகள் தெரியவந்தது. அந்த பகுதியில் இருந்த பெண்களிடமும் கண்ணன் இப்படித்தான் சேட்டை செய்திருக்கிறார்.. எல்லாரும் திரண்டு வந்து போலீசில் தங்களிடம் அத்துமீறிய கண்ணனை பற்றி புகார் சொன்னார்கள்.. இதையடுத்து, கண்ணன் தாக்கியதில் காயமடைந்த பாட்டியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், கண்ணனிடம் விசாரணை நடத்த முயன்றுள்ளனர்.

புகார்கள்

புகார்கள்

அக்கம்பக்கத்தில் உள்ள எல்லா பெண்களிடமும் கண்ணன் இப்படித்தான் நடந்து கொண்டுள்ளார்.. 2 நாளைக்கு முன்புகூட கொரோனா களப்பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடக்கமுயன்றது தொடர்பாக செம்பியம் போலீசில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாம்.. இதனிடையே கண்ணன் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.. அதனால் அவரை போலீசார் தேட ஆரம்பித்தனர்.. பின்னர் மறைவாக இருந்தவரை கண்டுபிடித்தும் விட்டனர்.

மனநலம் பாதிப்பு

மனநலம் பாதிப்பு

ஆனால் அங்கேதான் ஒரு ட்விஸ்ட் நடந்தது.. கண்ணனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறி கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்களாம்.. இதை கேட்டு கொதிப்படைந்த மக்கள், எல்லாம் டிராமா, தப்பிக்க வெச்சிடாதீங்க ப்ளீஸ்.. அப்படி மனநலம் சரியில்லாதவர் எப்படி ஸ்டேஷனில் போலீசாக வேலை பார்த்து வருகிறார் என்ற கேள்வியையும் முன்வைத்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
sexual complaint on chennai policeman kannan, and inquriy is going on it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X