• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"டார்ச்சர்".. நெருங்கி பழகிய 3 மாஜிக்கள், 1 எக்ஸ் எம்பி மீது பாலியல் புகார்.. கலக்கத்தில் விஐபிக்கள்

|

சென்னை: மாஜி அமைச்சர் மணிகண்டன் கைதாவார் என்று பார்த்தால், அதற்கு முன்பே 3 மாஜிக்கள் கைதாகி விடுவார்கள் போல தெரிகிறது.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளதாம்.. இந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்தான் அரசியல் களத்தை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த முறை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பேயே, தன்னுடைய பிரச்சாரத்தில் ஒரு உறுதிமொழியை தந்திருந்தது..

பெண்களுக்கான பாதுகாப்பினை நிச்சயம் திமுக அரசு வழங்கும் என்று உறுதியுடன் சொன்னது.. அதேபோல பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்து, நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தது.

நானும் ரவுடிதான்.. மலேசிய தூதுவரானதும் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டேன்.. கெத்து காட்டும் சாந்தினி நானும் ரவுடிதான்.. மலேசிய தூதுவரானதும் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டேன்.. கெத்து காட்டும் சாந்தினி

அதிமுக

அதிமுக

அந்த வகையில் மாஜிக்கள் மீதான புகார்கள் தூசி தட்டி எடுக்கும் முயற்சியிலும் திமுக இறங்கிவிட்டது.. இதற்காக அதிகாரிகள் டீமையும் உள்ளே கொண்டு வந்ததுடன், பாலியல் புகார்கள் தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் திரட்டும் முயற்சியிலும் இறங்கி விட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் நடிகை சாந்தினி விவகாரம் வெளியே வந்தது.

கமிஷனர்

கமிஷனர்

கமிஷனர் ஆபீசுக்கு சாந்தினி சென்ற, அன்றைய தினமே மணிகண்டன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. சாந்தினி யாரென்றே தெரியாது என்று சொன்னார்.. ஆனால், அதற்கு பிறகு மணிகண்டனைதான் காணோம்.. எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. விரைவில் இவர் கைதாவார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், மேலும் 3 அதிமுக மாஜிக்கள் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது.. இவருடன் ஒரு முன்னாள் எம்பி மீதும் பாலியல் புகார் கூறப்படுகிறது.

 மத்திய மண்டலம்

மத்திய மண்டலம்

இவர்கள் 4 பேரும் யார் என்று தெரியவில்லை.. ஆனால், 3 அமைச்சர்களில் 2 பேர் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களாம்.. ஒருவர் ஒருவர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவராம்.. அந்த எம்பி, மத்திய மண்டலத்தை சேர்ந்தவராம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர், நடிகைகள் பின்னால் சுற்றினாலும் இந்த 3 பேர் மட்டும் நடிகைகள் மட்டுமல்லாது தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களிடம் போன் நம்பரை வாங்கி அவர்களுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

சென்னை

சென்னை

சென்னையில் இருக்கும்போது அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது பதவி இழந்த முன்னாள் அமைச்சர்கள், அந்த பெண்களை கண்டு கொள்ளாமல் ஏமாற்றி விட்டார்களாம். இதனால் மாஜிக்கள் வசிக்கும் பழைய வீடுகளுக்கு சென்று அவர்கள் தேடி பார்த்துள்ளனர்.. ஆனால், அவர்கள் வீட்டை காலி செய்து விட்டதால், கண்டுபிடிக்க முடியவில்லை..

செல்போன்

செல்போன்

தற்போதும் அவர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது... அவர்களுடைய செல்போன் நம்பர்களையும் மாற்றிவிட்டதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.. அதனால், இந்த 3 முன்னாள் அமைச்சர்கள் மீதும் புகார் செய்வது குறித்து வக்கீல்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

சட்டப்பேரவை

சட்டப்பேரவை

அந்த முன்னாள் எம்பி, இப்போதுகூட சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவராம்.. இவர் திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது... எனவே, இவர் மீது புகார் செய்ய அந்த பெண் முன்வந்தபோது, அதற்குள் அவரை எம்பி தரப்பு சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.. ஆனால், தந்த வாக்குறுதிபடி மாஜி நடந்து கொள்ளவில்லை என்பதால், மறுபடியும் அந்த பெண் போலீஸ் வரை சென்று புகார் தர உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

 ஜெயலலிதா

ஜெயலலிதா

ஆனால், ஜெயலலிதா இருக்கும்போது, 1991 முதல் 1996ம் வரை பல முன்னாள் அமைச்சர்கள் மீது நடிகைகள் வரிசையாக புகார் தெரிவித்தனர்... பாரபட்சமேயின்றி, தயவுதாட்சண்யமேயன்றி ஜெயலலிதா டக்டக்கென நடவடிக்கை எடுத்தார்.. இந்த 4 வருட காலத்தில், எடப்பாடி பழனிசாமி அரசு மீது ஊழல் குறித்த புகார்கள்தான் வந்ததே தவிர பாலியல் புகார்கள் அவ்வளவாக வந்ததில்லை.

ஆடியோ

ஆடியோ

ஒரே ஒரு அமைச்சரின் ஆடியோ மட்டும் வெளியாகி பரபரப்பை தந்தது.. ஆனால் அதுவும் பொள்ளாச்சி சம்பவத்தை போலவே அமுங்கி போய்விட்டது. ஆக மொத்தம் திமுக அரசு தன் கடமையை செய்ய காத்து கொண்டிருக்கிறது.. அதிமுக முன்னாள்களில் கைதாக போவது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கா? அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Sexual harassment allegations on Ex ADMK Ministers, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X