சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் புகார்: பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பெயரை வெளியிடக்கூடாது - ஹைகோர்ட்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே புகார் தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களில் நிலை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே புகார் தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களில் நிலை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை வெளியிடவோ பயன்படுத்தவோ கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.

டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. காவல்துறையில் பணிபுரியும் பெண்ணிற்கே இந்த நிலைமையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு குறித்து மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தானாக முன்வந்து விசாரிக்கும் இவ்வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Sexual harassment of Rajesh Das: Is this the case with a female IPS officer? - High Court Judge

சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி வகித்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு குறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டது.

உடனடியாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அவர் நாடுவார் என்றும் முன் ஜாமீன் கோருவார் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளார். காவல்துறையில் பணிபுரியும் பெண்ணிற்கே இந்த நிலைமையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கு குறித்து மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தானாக முன்வந்து விசாரிக்கும் இவ்வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவிருப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

பிற்பகலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஐபிஎஸ் அதிகாரியே புகார் தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களில் நிலை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதோடு, இந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.

இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை வெளியிடவோ பயன்படுத்தவோ கூடாது எனவும் நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என அறிவித்த நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தர உத்தரவு பிறப்பித்தார்.
இந்த பாலியல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரைத்துள்ளார்.

English summary
Is this a situation for a female police officer? High court judge tormented. He also announced that the trial would take place this afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X