சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டிலேயே மிக அதிக அளவில் ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரி.. புதுமை நாயகன் சங்கர் ஜிவால்

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸ் காவலில் புதுமையை புகுத்திய ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் சென்னை காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில் பல அதிரடி மாற்றங்களை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் அவரைச் சுற்றியுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி

தமிழக முதல்வரின் செயலாளர்களாக உதயச்சந்திரன், சண்முகம், உமா நாத், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அது போல் ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மகேஷ்குமார் அகர்வால்

மகேஷ்குமார் அகர்வால்

அதில் சென்னை காவல் துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் யார் என்பதை பார்ப்போம்.

திருச்சி ஆணையர்

திருச்சி ஆணையர்

சங்கர் ஜிவால் 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். அவர் தற்போது ஆயுதப்படை ஏடிஜிபியாக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தில் சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸுக்கு தலைமையேற்று நடத்தி வந்தார். இவர் திருச்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

கண்காணிப்பது

கண்காணிப்பது

அந்த காலகட்டத்தில் இ சல்லான் முறைகளை அறிமுகப்படுத்தினார். ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு அமல்படுத்தினார். பூட்டப்பட்ட வீடுகளை எஸ்எம்எஸ் மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்தார்.

குற்றவியல் புலனாய்வு

குற்றவியல் புலனாய்வு

அது போல் ஐஜிபியாக இருந்த போது குற்றவியல் புலனாய்வு பிரிவை உருவாக்கினார். அது போல் மாநில புலனாய்வு பிரிவுகளின் தொழில்நுட்ப கண்காணிப்புத் திறனை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்திருந்தார். போதை தடுப்பு பிரிவின் தென் மண்டல இயக்குநராகவும் கடந்த 2004-2006-ஆம் ஆண்டுபணியாற்றினார்.

போதை பொருள்

போதை பொருள்

நாட்டிலேயே மிக அதிகமாக ஹெராயின் எனும் போதை பொருளை அதிகமாக பறிமுதல் செய்தவர் சங்கர் ஜிவால். இவருக்கு 2019-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் காவல் துறைக்கான விருது வழங்கப்பட்டது. போலீஸ் காவலில் புதுமையை புகுத்திய சங்கர் ஜிவால் இன்று சென்னை காவல் துறை ஆணையராக பதவியேற்றுள்ளார்.

English summary
Newly appointed Chennai Police Commissioner Shankar Jiwal is known for largest seizure of heroin in the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X