சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநிலங்களவை எம்பி-யானார் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம்.. ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கியவர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொதுச் செயலாளரான சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார். தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொமுச பேரவையின் பொதுச் செயலாளராக 77 வயதாகும் சண்முகம் பதவி வகித்து வருகிறார்.

Shanmugam became a member of the DMK Rajya Sabha .. Story of a soldier to MP

சண்முகம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முன்னாள் ராணுவ வீரரும் கூட கடந்த 1961-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த சண்முகம்11 ஆண்டுகள் தேசத்திற்காக பணியாற்றியுள்ளார்.

பின்னர் 1972-ம் ஆண்டில் சண்மும் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு பணி நிமித்தமாக தலைநகர் சென்னைக்கு வந்து குடிபுகுந்தார்.

1977-ம் ஆண்டிலிருந்து தொழிற்சங்கத் தலைவராக விளங்கிய திருவொற்றியூர் மா.வெ.நாராயணசாமி, தொமுச பேரவைத் தலைவர் செ.குப்புசாமி ஆகியோருடன் இணைந்து தொழிற்சங்கப் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தொமுச பேரவையில் படிப்படியாக பல பதவிகளை வகித்துள்ளார் சண்முகம் தொமுச செயலாளராக 11 ஆண்டுகளும் பின் பொருளாளராக 8 ஆண்டுகளும் பதவி வகித்துள்ளார். அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை தொமுச பேரவை பொதுச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

வயிறெல்லாம் எரியுதுங்க.. வீணாக திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம் வயிறெல்லாம் எரியுதுங்க.. வீணாக திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம்

இன்றும் பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கு பெற்று தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். தற்போது திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவையிலும் தொழிலாளர்களுக்காக இவரது குரல் ஒலிக்கட்டும்.

English summary
The Chief Secretariat has officially announced that six candidates from Tamil Nadu have contested for the Rajya Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X