சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பாஜகவுக்கு செக்".. தேசிய அரசியலில் விஸ்வரூபம் எடுக்கிறார் ஸ்டாலின்?.. சோனியாவின் ஸ்கெட்ச்..!

தேசிய அளவில் ஸ்டாலினுக்கு பொறுப்பு தரப்படும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன், தேசியவாத காங்கிரசை இணைத்து, அக்கட்சியின் புதிய தலைவராக, சரத் பவார் பொறுப்பேற்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, முக ஸ்டாலினுக்கும் தேசிய அளவில் ஒரு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தற்போது சோனியா காந்தி உள்ளார்.

சோனியாவுக்கு உடம்பு சரியில்லாமல் உள்ள நிலையில், அக்கட்சியின் இடைக்கால தலைவராக மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார்... இந்நிலையில், அடுத்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.. எனவே ஐக்கிய கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி முழுவதுமாக விலகுவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

 சோனியா

சோனியா

அப்படியென்றால், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கேள்வி காங்கிரஸ் கட்சியில் வட்டமடித்து வருகிறது.. புதிய தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக இறங்கி உள்ளது.. புதிய தலைவர், அரசியல் அனுபவம் வாய்ந்தவராகவும், கட்சியினரை அனுசரித்து போகக்கூடியவராகவும், பாஜகவுக்கு மாற்றாக அதிரடி அரசியல் செய்ய தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பதே சோனியாவின் பெருத்த எதிர்ப்பார்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

 தலைமை

தலைமை

அதற்காகத்தான், புதிய தலைவராக ராகுல் காந்தியைதான் பரிசீலித்துள்ளனர்.. ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்காத பட்சத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.. அதனால் பிரியங்காவுக்கு தரலாம் என்றால், அது மறுபடியும் வாரிசு அரசியல் பிரச்சனையில் கொண்டுவந்து விட்டுவிடும் என்பதால், குடும்பத்தை சேராத ஒருவருக்கு பதவி தர யோசனை உள்ளது.. எனவேதான் பழுத்த அரசியல்வாதியான சரத்பவாரின் பெயர் வலுவாக உச்சரிக்கப்பட்டு வருகிறதாம்.

கூட்டணி

கூட்டணி

சரத் பவார் தலைமை வகிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை, காங்கிரசுடன் இணைத்துவிட்டு, புதிய காங்கிரஸ் தலைவராக அவரை பொறுப்பேற்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.. அதுமட்டுமல்ல, பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் அடங்கிய புதிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக சரத்பவார், துணைத்தலைவராக முக ஸ்டாலின், தேஜஸ்வீ பிரசாத் யாதவ், ஹேமந்த் சோரன் இடம் பெற வாய்ப்பு உள்ளதாம்.

 போராட்டம்

போராட்டம்

ஆனால், இந்த தகவலை சரத்பவார் மறுத்துள்ளார்.. விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் இதுபோன்ற வதந்திகள் பரவுவதாக கூறியுள்ளார்.. என்றாலும், பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டணி தொடர்பான அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

English summary
Sharad Pawar likely to take leadership of the opposition UPA Alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X