சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை இளைஞர்...காபி பவுடரில் காந்தி ஓவியம்...கின்னஸில் பதியப்படுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்ற ஓவியக் கலைஞர் 2,020 சதுர அடியில் காபி பவுடரில் கின்னஸ் சாதனைக்காக மகாத்மா காந்தி ஓவியம் வரைந்துள்ளார். இவர் ஏற்கனவே இதுபோன்று காந்தி படங்களை வரைந்துள்ளார்.

கின்னஸ் சாதனை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஓவியம் வரைந்துள்ளார். நேற்றுக் காலை 6 மணிக்குத் துவங்கி மாலை 6 மணிக்கு இந்த ஓவியத்தை வரைந்து முடித்துள்ளார். இவர் சென்னை கிண்டியில் இருக்கும் இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார்.

Shiva Raman from Chennai painted Mahatma Gandhis portrait in 2,020 square feet using coffee powder

இதுகுறித்து இந்துஸ்தான் சர்வதேச பள்ளி முதல்வர் ராதா ஸ்ரீகாந்த் கூறுகையில், ''ஏற்கனவே சிவராமன் இதுபோன்று ஓவியங்களை வரைந்துள்ளார். 158.5 சதுர மீட்டரில் தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 13 மணி நேரத்தில் வரைந்து இருந்தார். அந்த ரெக்கார்டை இவர் முறித்துள்ளார்.

Shiva Raman from Chennai painted Mahatma Gandhis portrait in 2,020 square feet using coffee powder

 சுதந்திர தின போட்டிகள்: ஆன்லைனில் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள் சுதந்திர தின போட்டிகள்: ஆன்லைனில் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய பள்ளி மாணவர்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச பக்தியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிவராமனின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று ஏதாவது செயல்களை செய்வோம். அவருடைய எண்ணமும் அதுதான் ஏற்கனவே 73 காந்தி முகத்தை ஏற்கனவே வரைந்து முடித்துள்ளார். இவர் தற்போது முந்தைய ரெக்கார்டுகளை முறித்துள்ளார்'' என்றார்.

Shiva Raman from Chennai painted Mahatma Gandhis portrait in 2,020 square feet using coffee powder
English summary
Shiva Raman from Chennai painted Mahatma Gandhi's portrait in 2,020 square feet using coffee powder
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X