சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை!

சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாறு என்று தமிழக பாஜக டிவிட் செய்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாறு என்று தமிழக பாஜக டிவிட் செய்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுக்க பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பொங்கல் முடிந்த நிலையில் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றில் இருந்து தமிழகம் முழுக்க பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

நேற்றுக்கு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இன்று அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.

 வடக்கில் இருந்து வரும் முக்கிய புள்ளி.. தமிழக பாஜக தலைவர் யார்?..நாளை வெளியாகிறதா அறிவிப்பு? வடக்கில் இருந்து வரும் முக்கிய புள்ளி.. தமிழக பாஜக தலைவர் யார்?..நாளை வெளியாகிறதா அறிவிப்பு?

பாஜக டிவிட்

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து தமிழக பாஜக டிவிட் செய்துள்ளது. அதில், அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது. இந்த நிகழ்வை கொண்டு சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை "இந்துக்கள்" பின்பற்றி வருகின்றனர், என்றுள்ளது.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

இப்படி சர்ச்சையாக டிவிட் செய்வது தமிழக பாஜகவின் வழக்கம் ஆகிவிட்டது. தமிழக பாஜகவின் இந்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்த டிவிட்டிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வரலாற்று ரீதியாக இது உண்மை கிடையாது. இதற்கு ஆதாரம் இல்லை என்று பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

என்ன டிவிட்டர்

டிவிட்டரில் இது பெரிய விமர்சனத்தை சந்தித்துள்ளது. பலரும் இது சுத்த பொய், கதை என்று பதில் அளித்துள்ளனர்.

துணை குடியரசுத் தலைவர்

துணை குடியரசுத் தலைவர்

இன்று காலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திருவள்ளுவர் புகைப்படத்தை காவி நிற உடையில் டிவிட்டரில் பதிவிட்டார். இது பெரிய சர்ச்சையானது. பின் தமிழக பாஜகவும் அதை ரீ டிவிட் செய்தது. அதன்பின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, இரண்டு பேரும் அதை டெலிட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
God Shiva's wrestling with Arjuna is called Jallikattu says TN BJP tweeter handle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X