• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அந்த" நடிகையுடன் காரில்.. ஓட்டை போட்டு ஆட்டையை போட்ட திருவாரூர் முருகன்.. வெலவெலக்க வைத்த 2020!

|

சென்னை: எத்தனையோ கொள்ளைகள் தமிழகத்தில் நடந்தாலும், லலிதா ஜுவல்லரி கொள்ளையை நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.. அதேசமயம் திருவாரூர் முருகனின் மரணத்தையும் மறக்க முடியாது!

திருச்சியின் மையப்பகுதியில் உள்ளது லலிதா ஜூவல்லரி கடை.. இந்த கடையை சுற்றிலும் கேமராக்கள், செக்யூரிட்டிகள், வாட்ச்மேன்கள் இருந்தும், கோடி கோடியாக நகைககள் கொள்ளை அடிக்கப்பட்டன.

இது சம்பந்தமாக போலீசார் விசாரணையை மேற்கொண்டபோதும், எந்த க்ளூவும் உடனடியாக கிடைக்கவில்லை.. கொள்ளையடித்த நகையை பங்கு போட்டு கொண்டு, ஒரு பைக்கில் செல்லும்போதுதான், டிராபிக் போலீசில் மாட்டினர் கொள்ளையர்கள்... அப்படிதான் முருகனும் சிக்கினார்.

டெக்னிக்குகள்

டெக்னிக்குகள்

தேசம் தேடும் கொள்ளைக்காரன் இந்த முருகன்.. மணி ஹீஸ்ட் என்ற ஹாலிவுட் சீரியலை பார்த்தே வங்கி கொள்ளையை நாடு முழுவதும் அமல்படுத்தி உள்ளார்.. இந்த ஹாலிவுட் படங்களின் டெக்னிக்குகள், நுணுக்கங்கள் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் புரியாது.. ஆனால், இதை படிப்பறிவு அவ்வளவு இல்லாத முருகன் இதை கற்று கொண்டு, அதை செயல்படுத்துவதற்காக சோதனை முயற்சியில் ஈடுபடுட்டது மலைப்பை தருகிறது. அதனால்தான் கர்நாடகா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு மாநில போலீசாருக்கே தண்ணி காட்ட முடிந்திருக்கிறது.

 சினிமா படம்

சினிமா படம்

முருகனை போலீசார் பிடிக்க தீவிரம் காட்டியபோது, அதிகமான தகவல்கள் முருகனின் கேரக்டர் பற்றி வெளிவந்து கொண்டே இருந்தது.. சினிமா படம் எடுக்க ஆசைப்பட்டு, தெலுங்கு பக்கம் ஒதுங்கி, பணத்தை இழந்து, மறுபடியும் கொள்ளை அடிக்க முயன்று கொண்டே இருந்திருக்கிறார்.. இந்த சினிமா எடுக்கும் சமயத்தில்தான் முருகனுக்கு நிறைய நடிகைகளுடன் தொடர்பு இருந்துள்ளது.. கொள்ளையடித்த நகைகளை அவர்களிடம் காட்டியே, விழ வைத்துள்ளார்.. வாய்ப்புகள் கிடைக்காத துணை நடிகைகளும் விதவிதமான நகைகளுக்கு ஆசைப்பட்டு முருகனை மகிழ்வித்துள்ளனர்.

எய்ட்ஸ்

எய்ட்ஸ்

கடைசியில் முருகனை எய்ட்ஸ் நோய் தாக்க, அது தொடர்பான சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.. சொகுசு ஆம்னி வேனில், ஒரு துணை நடிகையை வைத்து கொண்டு ரவுண்டு அடித்து போலீசுக்கு இவர் தண்ணி காட்டியதை மறக்க முடியாது.. கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்தததிலும், முருகனை கைது செய்ததிலும் கர்நாடக போலீசார் பெயரை தட்டிக் கொள்ள முயன்றதையும் மறக்க முடியாது.

 மஞ்சுளா

மஞ்சுளா

நோய் தாக்கிய முருகன் மெலிந்து போய், முடி கொட்டி.. பல் கொட்டி.. ஆளே அடையாளம் தெரியாமல் உருமாறிபோய்.. கடைசியில் பக்கவாதமும் தாக்கி வீல்சேர் வாழ்க்கை வந்து சேர்ந்தது.. மனைவி மஞ்சுளாவின் கடவுள் பக்தியும் முருகனை காப்பாற்றவில்லை.. மஞ்சுளாவும் கணவனை கண்டிக்கவில்லை.. திருத்தவும் இல்லை.. அதேபோல, இதுபோன்ற கொள்ளையர்களையும் சில அதிகாரிகள் பொத்தி பாதுகாத்து விடுவது ஏற்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது!

 தண்டனை

தண்டனை

ஒருசில காவல்துறை அதிகாரிகள் நினைத்திந்தால், முருகனை என்றோ கைது செய்து தூக்கி உள்ளே வைத்திருக்க முடியும்.. எனினும், சிறை வாழ்க்கையில் திருந்தாமலேயே முருகனின் உயிர் பறிபோயுள்ளது.. யாருக்குமே கொஞ்சமும் வருத்தமில்லாத முறையில் மரணத்தை தழுவ நேர்ந்ததே முருகனுக்கு கிடைத்த காலத்தின் தண்டனை!

 
 
 
English summary
Shock crimes 2020: Lalitha Jewellery theft case Murugan death
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X