• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"டிரஸ்ஸுக்குள்".. மறைத்து கேடித்தனம்.. கைவரிசை காட்டி.. 2020ஐ அதிர வைத்த திருட்டு ராணிகள்!

|

சென்னை: இழுத்து போர்த்திக்கிட்டு வந்த வளர்மதி முதல் வயதான நிர்மலா வரை இந்த வருடம் திருட்டு சம்பவத்தில் நம்மை அதிர வைத்தவர்கள் ஏராளம்.. வருடா வருடம் திருட்டு என்பது இயல்பாக நடந்து வந்தாலும், பெண் என்பதையே ஆயுதமாக பயன்படுத்தி, அவர்கள் அணியும் சேலைகளில் திருட்டு பொருட்களை கடத்தி உள்ளனர் சில பெண்கள்.. இதனால் போலீஸ் தரப்பே அதிர்ந்து போனதுதான் உச்சக்கட்ட வியப்பு!

வழக்கமாக, பண்டிகை காலங்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பது இயல்பு.. இதற்காக போலீசார்
நகரின் எல்லா கடைவீதிகளிலும் கூட்ட நெரிசல் நிரம்பி வழியும்.. இந்த நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் வழக்கமாக நடக்கும் எனினும், எல்லா இடங்களிலும் கண்ணும் கருத்துமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அவசர எண்களை ஆங்காங்கே வைத்து, விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதி மாட்டி வைத்தும், கவனமுடன் இருக்கும்படி, அறிவுரைகளையும் பொதுமக்களுக்கு சொல்லி கொண்டே இருந்தும், சில பெண்கள் தைரியமாக கைவரிசையை காட்டி விடுகின்றனர். அப்படித்தான், இந்தமுறை எதிர்பாராமல் சிக்கினார் நிர்மலா.

கேமரா

கேமரா

வண்ணாரப்பேட்டையில் வீராஸ் என்ற துணிக்கடையில் திருட வந்தவர்... இவர் கடையில் இருந்த கூட்டத்தில் முண்டியடித்து முண்டியடித்து பரபரப்புடன் இங்குமங்கும் நடமாடவேதான் வசமாக தானாகவே சிக்கி கொண்டார்.. அதற்கேற்றபடி, கடையில் இருந்த சிசிடிவி கேமிராவை கடை ஊழியர்கள் கண்காணித்து வரவும், அந்த நேரம் பார்த்து, காஸ்ட்லி புடவை ஒன்றை எடுத்து, தன்னுடைய சேலைக்குள் மறைத்து திணித்து கொண்டிருந்தார்.

 புடவைகள்

புடவைகள்

இவரை ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தபோதுதான், ஏற்கனவே நிர்மலாவின் புடவைக்குள் வேறு சில புடவைகள் திருடி வைத்திருந்தது தெரியவந்தது. இவர் ஆந்திராவை சேர்ந்தவர்.. இந்த அளவுக்கு இந்த பெண் பேசப்பட காரணம், கடந்த வருடம் முதலே இவரை போலீசார் தேடி வந்தார்களாம்.. தி.நகர் சரவணா ஸ்டோர், போன்ற பெரிய பெரிய கடைகளில் திருடியவர் என்பதால், தேடப்படும் குற்றவாளியாக இருந்தவர் நிர்மலா.

 மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்

அதேபோல, சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் தனியாக நிற்கும் பெண்களின் பக்கத்தில் உரசி வந்து நிற்பாராம் ஜெய்த்தூன் என்னும் பெண்.. இவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்.. திடீரென அந்த பெண்களின் பர்ஸ், அல்லது செல்போனை எடுத்து தன் புடவைக்குள் மறைத்து வைத்து கொள்வாராம்.. லலிதா என்பவரின் பர்ஸை எடுத்து சேலைக்குள் திணித்து வைக்கும்போதுதான், இவரும் கையும் களவுமாக சிக்கி கொண்டார்.

ரவுடி

ரவுடி

இதுபோலவே சிக்கியவர் வளர்மதி என்பவர்.. சென்னை பூவிருந்தவல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள தனி சப் ஜெயில் கார்த்திக் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.. இவர் ஒரு ரவுடி.. கொலை வழக்கு சம்பந்தமாக கைதாகி இருக்கிறார்.. இவரை பார்ப்பதற்காகத்தான் வளர்மதி என்ற 21 வயது பெண் ஜெயிலுக்கு வந்தார்.. இவர் கார்த்திக்கின் உறவுகார பெண் என்று கூறப்படுகிறது.

பிஸ்கெட்

பிஸ்கெட்

கைதியை பார்ப்பதற்காக வளர்மதி, பிஸ்கட், பழம் என ஒரு பையில் போட்டு கொண்டு வந்திருந்தார்.. வழக்கமாக போலீசார் எந்த பொருட்களை சிறைக்குள் கொண்டு சென்றாலும் அதை பரிசோதித்த பின்னரே உள்ளே அனுப்புவது வழக்கம்.. அந்த வகையில் யதார்த்தமாகத்தான் வளர்மதியின் கூடையை செக் செய்தபோது, அந்த பிஸ்கெட் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது.

அப்பாவிகள்

அப்பாவிகள்

அதை உற்று பார்த்தபோது, ஒரு ஓட்டை தெரிந்தது.. அந்த ஓட்டைக்குள் பார்த்தால் கஞ்சாவை செருகி வைத்து எடுத்து வந்துள்ளார் வளர்மதி.. கஞ்சாவை கார்த்திக்கு தருவதற்காக கொண்டு வந்துள்ளார்.. கடைசியில் கைதியை பார்க்க வந்த வளர்மதியும் கைதாகி அதே ஜெயிலில் வைத்தனர்... பெண் என்ற ஒரே காரணத்தினால், இதுபோன்ற சிலரையும் நம்பி உடமைகளை இழந்த அப்பாவிகள் ஏராளம்!

English summary
Shock crimes 2020: Women arrested for theft cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X