சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம்.. அரசு அதிரடி அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி அளித்துள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இனிமேல் இரவு10 மணி வரை நீட்டிக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என்று அழைக்கப்படும் கண்டைன்மெண்ட் ஏரியாக்களை தவிர்த்த பிற அனைத்து பகுதிகளுக்கும் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும்.

ஆனானப்பட்ட அமெரிக்காவிலும் தேர்தல் தில்லுமுல்லு.. அதுவும் போலீஸே உடந்தை.. மாஸ்க்கில் காட்டிய வித்தைஆனானப்பட்ட அமெரிக்காவிலும் தேர்தல் தில்லுமுல்லு.. அதுவும் போலீஸே உடந்தை.. மாஸ்க்கில் காட்டிய வித்தை

தசரா, தீபாவளி பண்டிகை காலம்

தசரா, தீபாவளி பண்டிகை காலம்

தசரா, தீபாவளி என வரிசையாக பண்டிகை காலம் வருவதால், பொதுமக்கள் அதிக அளவுக்கு சந்தைகளுக்கும் பொருட்கள் வாங்க வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒரு மணி நேரம் கடைகளை திறந்து இருக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

அரசு சாதனை

அரசு சாதனை

அம்மாவின் அரசு இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. மேலும் நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாக இருந்து வருகிறது.

கடைகள் திறப்பு நேரம்

கடைகள் திறப்பு நேரம்

எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுக்க முழுக்க, கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காய்கறி, கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இன்று (22ஆம் தேதி) முதல், இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

பொது மக்களுக்கு கோரிக்கை

பொது மக்களுக்கு கோரிக்கை

அம்மாவின் அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த்தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்த சூழ்நிலை நீடிக்க, எதிர்வரும் பண்டிகை காலங்களில் நோய்த் தொற்று அதிகரிப்பைதடுக்க, கடைகள் மற்றும் பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்க, முகக் கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைபிடிப்பதும், அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவது போன்றவற்றை, பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

English summary
Shops and provision stores, vegetable shops can be open till 10 p.m. in Tamilnadu from October 22 (tomorrow). Tamilnadu government has given relaxation and time extension due to festival season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X