சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு குடும்பத்துக்கு 2 குடம் தண்ணீர் மட்டுமே தரணும்.. குளிக்க துவைக்க கொடுக்ககூடாதென அறிவுரை

Google Oneindia Tamil News

சென்னை: குடிநீர் பஞ்சத்தை போக்குவது எப்படி என்ற பயிற்சியில், குடிக்க மட்டுமே ஒரு குடும்பத்துக்கு 2 குடம் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் குளிக்க , துவைக்க தண்ணீர் கொடுக்க கூடாது என்றும் பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் பொறியாளர்களுக்கு நீரியல் வல்லுநர் அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் பருவமழைகள் பொய்த்துபோன நிலையில், அணைகள், குளங்கள்,நீர்நிலைகள் வறண்டு போய் கிடக்கின்றன. இதனால் சென்னை, உள்பட தமிழகம் முழுவதுமே மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

சென்னையில் பூண்டி மற்றும் புழல் உள்பட 4 ஏரிகளில் 127 மில்லியன் கனஅடி நீர் தான் இருப்பு இருக்கிறது. இருக்கம் நீரை வைத்து எப்படி சென்னை குடிநீர் தேவையை சமாளிப்பது என்பது பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும், நீரியல் வல்லுனரும் பேராசிரியருமான நடராஜன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தினார்.

எதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க! எதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க!

அதிகாரிகள் பங்கேற்பு

அதிகாரிகள் பங்கேற்பு

இந்த பயிற்சி வகுப்பில் பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர், குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிகரன் மற்றும் குடிநீர் வாரிய மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

சமாளிப்பது எப்படி

சமாளிப்பது எப்படி

அப்போது அணைகள், ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில அதை கொண்டு எப்படி சிக்கனமாக விநியோகிப்பது எப்படி, தண்ணீர் பிரச்னையை சமாளிப்பது எப்படி என நடராஜன் ஆலோசனை வழங்கினார். மேலும் தற்போது உள்ள சூழலில் குடிநீரை பெறுவதற்கான மாற்றுவழிகள் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்.

பயன்படுத்தாத ஏரிகள்

பயன்படுத்தாத ஏரிகள்

இது தொடர்பாக குடிநீர்வாரிய அதிகாரிகள் கூறுகையில், அணைகள் ஏரிகள் அருகே ஆழ்குழாய் அமைத்து குடிநீர் பெறுவது குடிநீருக்கு பயன்படுத்தாமல் உள்ள ஏரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து வழங்வதுஉள்ளிட்ட ஆலோசனைகளை நீரியல் வல்லுனர் வழங்கினார்.

ஆடம்பரமாக திறக்க கூடாது

ஆடம்பரமாக திறக்க கூடாது

மேலும் குடிநீரை இதுவரை அனைத்து தேவைக்கும் பயன்படுத்த திறக்கப்பட்ட நிலையில் குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஒரு நாளைக்கு நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு 2 குடம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடம்பரமாக தண்ணீர் தரக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார் என கூறினர். இதனிடையே ஒரு நாளைக்கு 2 குடம் தண்ணீர் மட்டுமே தரவேண்டும் என்றும் மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் குளிக்க, துவைக்க தரக்கூடாது என்றும் தமிழக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
should give two Pot drinking water to tn people for water crisis issue: Hydraulic consultant advice to official
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X