பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான ராயப்பேட்டை நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்கணும்: ஹைகோர்ட்
சென்னை: பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான ராயப்பேட்டை நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அருள்மிகு பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து அறநிலைய துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்காததால் கோவில் கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோவில் நிலத்தில் 3 அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாகவும் மனுவில் குற்றஞ்ச்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவல்துறையின் உதவிடன் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 18 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!


Click it and Unblock the Notifications


























