சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி - முதல்வர் அறிவிப்பு

சரக்கு வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் சரக்கு வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.50 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வந்தவர் பாலு. ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சரக்கு வாகனம் ஓட்டிய முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தினார்.

SI Balu killed in a truck accident CM announces Rs 50 lakh relief fund for the family

வாகனம் இயக்கி வந்த முருகவேல் குடிபோதையில் இருப்பது தெரியவர, அவரிடமிருந்து வாகனத்தைப் பறிமுதல் செய்த எஸ்.ஐ. ஓட்டுநரை எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், நள்ளிரவு 02.00 மணி அளவில் மற்றொரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்து வாகனச் சோதனை செய்துகொண்டிருந்த எஸ்.ஐ.பாலு மீது ஏற்றிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடினார். கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பாலு குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலையும் அறிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த, திரு.பாலு அவர்கள் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து சிறப்பு நிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy has announced financial assistance of Rs 50 lakh to the family of SI Balu who was killed in a truck accident in Thoothukudi district. Chief Minister Palaniachai has also announced that one of the family members of Assistant Inspector Balu, who died during the operation, will be given a government job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X