சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சித்த மருத்துவர் வீரபாபு 10 ரூபாய் கட்டணத்தில் திடீரென தொடங்கிய உழைப்பாளி மருத்துவமனை.. ஏன்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு, தற்போது செனை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்ற ஒன்றை தொடங்கி உள்ளார். 10 ரூபாய் மட்டுமே மருத்துவக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Recommended Video

    உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு.. 10 ரூபாய்க்கு சிகிச்சை - வீடியோ

    கொரோனா தொற்று உலகம் முழுவதும் உச்சம் தொட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில அரை கோடியை தாண்டிவிட்டது. தமிழகத்தில் தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவதத்தில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சித்த மருத்துவர் வீரபாபு முதல் முதலில் அரசின் அனுமதி பெற்று கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவமனயை சென்னை சாலிகிராமத்தில் தொடங்கினார்.

    இந்தியா இழந்தது கோல்டன் வாய்ப்பு... உச்சத்தில் கொரோனா... காங்கிரஸ் எம்பி குலாம் நபி விளாசல்!! இந்தியா இழந்தது கோல்டன் வாய்ப்பு... உச்சத்தில் கொரோனா... காங்கிரஸ் எம்பி குலாம் நபி விளாசல்!!

    கொரோனா சிகிச்சை

    கொரோனா சிகிச்சை

    சாலிகிராமத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் செயல்பட்ட இவரது சிகிச்சை மையத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது. கிட்டத்த்ட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    காரணம் தெரியவில்லை

    காரணம் தெரியவில்லை

    இந்நிலையில் சித்த மருத்துவர் வீரபாபு கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன் 10 ரூபாய் சிகிச்சை கட்டண மருத்துவமனயை தொடங்கப்போவதாக அண்மையில் அறிவித்தார். அதற்கான காரணங்கள் தெளிவாக தெரியவில்லை .

    10ரூபாய் மருத்துவமனை

    10ரூபாய் மருத்துவமனை

    இதன்படி சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை வீரபாபு தொடங்கி உள்ளார். இன்று அந்த மருத்துவமனை திறக்கப்பட்டது. ஏற்கனவே சாலிகிராமத்தில் 10 ரூபாய் சாப்பாடு உழைப்பாளி உணவம் செயல்பட்டு வருகிறது. இப்போது சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் 10ரூபாய் கட்டணத்தில் உழைப்பாளி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைத்த சிகிச்சை

    ஒருங்கிணைத்த சிகிச்சை

    ஆங்கில மருத்துவமும் பார்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற மருத்துவர் அன்பழகன் சிகிச்சைஅளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த சிகிச்சையும் அளிக்கப்படும் என்று மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரபாபு சிசிச்சை அளித்து வந்த கொரோனா மையத்தில் 200 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் விலகி தனி மருத்துவமனை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Siddha doctor Veerababu started uzhaipali hospital with a medical fee of 10 rupees in saligramam, chennai. before Siddha doctor Veerababu given treatment corona infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X