சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புரத உணவுகளை எடுங்க.. கார்போஹைட்ரேட் உணவுகளை குறைங்க.. ஆக்ஸிஜன் அளவு குறையாது.. சித்த மருத்துவர்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து சித்த மருத்துவர் சேகர் விளக்கியுள்ளார்.

Recommended Video

    Corona-விலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? Siddha doctor விளக்கம்|

    இதுகுறித்து சித்த மருத்துவர் சேகர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்து அது சில நாட்கள் கழித்துதான் வெளிப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அதன் அடிப்படையில்தான் கொரோனா தாக்கம் இருக்கிறது.

     மு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள் மு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்

    நோய் வரும் முன்னரே சில அறிகுறிகள் உள்ளன. அதை வைத்து முன்கூட்டியே மருத்துவமனைக்கு சென்றால் நல்லபடியாக கொரோனாவிலிருந்து மீளலாம். குறைந்த அளவு பிரச்சினைகள் இருக்கும் போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் நல்லதாகும்.

    பயம்

    பயம்

    முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை இத்தனை மோசமான பாதிப்பை கொடுப்பதற்கு காரணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை. முதல் அலையின் போது நிறைய மக்களிடம் பயம் இருந்தது. நிறைய பேர் வெளியே செல்லவில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடித்தார்கள்.

     கையுறை

    கையுறை

    மாஸ்க் போட்டார்கள். கையுறைகளை எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பயம் இந்த அலையில் மக்களிடம் இல்லை. இந்த கொரோனா வைரஸ் நம் நுரையீரலில் உள்ள நீரை சளியாக மாற்றுகிறது. பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது ஆவி பிடிக்கலாம். அருகில் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

     மத்திய அரசு

    மத்திய அரசு

    மூன்றாவது அலை வரும் என மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் தெளிவாக சொல்லியுள்ளார்கள். கொரோனா வந்தாலும் மனவலிமை இருக்க வேண்டும். புரத சத்துகளை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். தியானம் செய்யலாம். சிறிய சிறிய மூச்சுதப் பயிற்சிகள செய்யலாம். ஏசியில் இருக்கக் கூடாது.

     அறிகுறிகள்

    அறிகுறிகள்

    கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் ஆவி பிடித்தல் நல்லது . நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பாதாம்-20 , பேரிச்சம் - 10 இரவே ஊறவைத்துவிட்டு அதை காலையில் வெறும் வயிற்றில் மிக்ஸியில் அடித்து குடித்தால் தேவையான புரதசத்துகள், ஆக்ஸிஜன் நிறைய கிடைக்கும்.

     அரை ஸ்பூன்

    அரை ஸ்பூன்

    அது போல் பாலில் கடுக்காய் அரை ஸ்பூன் அல்லது கிராம்பு அரை ஸ்பூன் கலந்து குடிக்கலாம். கார்போஹைட்ரேட்ஸை குறைத்துக் கொண்டு டயட்டை மாற்ற வேண்டும். கவுனி அரிசி எடுத்துக் கொள்ளலாம். காலையில் பாதாம், பேரிச்சம் ஜூஸ் குடிக்கலாம், 7.30 மணிக்கு சிவப்பு அவலில் உப்புமா செய்து சாப்பிடலாம்.

    கீரை

    கீரை

    அது போல் முளைக் கட்டிய தானியம் ஏதாவது ஒன்று கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை, காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது 3 லிட்டர் நீராவது குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் கஞ்சி குடித்தல் நல்லது. இது போன்ற டயட்டை பின்பற்றினால் ஆக்ஸிஜன் குறையும் நிலைக்கு நாம் செல்ல மாட்டோம் என்றார்.

    English summary
    Siddha Dr Sekar says how to tackle Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X