சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்க்குக்கே 'மார்க்கெட்' போயிடும் போல.. வாட்ஸ் அப்பில் இருந்து சிக்னலுக்கு தாவும் மக்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: மார்க் ஜூக்கர்பெர்க்கின் பேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப்பில் ப்ரைவேஸி கெடுபிடி காரணமாக சிக்னல் ஆபக்கு பலரும் மாறுகிறார்கள். முந்தைய மாதத்தை ஒப்பிடும் போது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 79 சதவீதம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்ததும் ஆப் என்றால் அது வாட்ஸ் அப் தான். பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் தனிநபர் பாதுகாப்பு என்ற பெயரில் சமீபத்தில் பல கடுமையான புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

Recommended Video

    சென்னை: Use signal… எலன் மஸ்க் ஒற்றை ட்வீட்: சிக்னல், டெலிகிராமில் உள்ள வசதிகள்!

    வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகளின்படி, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றவர்களுக்கு பகிரப்படும். இந்த விதிமுறையை ஏற்றுக் கொண்டதாக வாட்ஸ்அப்புக்கு 'ஓகே' பட்டனை கிளிக் செய்தால் மட்டுமே வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இல்லாவிட்டால், கணக்கு முடக்கப்படும்.

    பதிவிறக்கம் அதிகம்

    பதிவிறக்கம் அதிகம்

    இதனால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்களுக்கு மாறத் தொடங்கி உள்ளார்கள். இதன் எதிரொலியாக சிக்னல் ஆப்பை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    ஜனவரியில் உயர்வு

    ஜனவரியில் உயர்வு

    கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான கால கட்டத்தோடு ஒப்பிடுகையில், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் 6ம் தேதி வரையில் சிக்னல் ஆப் பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை 79 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    தகவல் சேகரிப்பு

    தகவல் சேகரிப்பு

    இந்த ஆப்பை பயன்படுத்தும்போது வாடிக்கையாளரின் செல்போன் எண் உட்பட எந்த தகவலும் சேகரிக்கப்படாது. அதேபோல், டெலிகிராம் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் சமீப நாட்களில் கணிசமாக உயர்ந்து உள்ளது.

    சம்பிரதாய அறிவிப்பு

    சம்பிரதாய அறிவிப்பு

    பேஸ்புக்கும், வாட்ஸ் அப்பும் தான் சமூக வலைதளங்களில் டாப் இடத்தில் இருக்கிறது. நம்முடைய போட்டோ,வீடியோ, கால் ஹிஸ்ட்ரி, தொடர்புகள் உள்பட எல்லா தகவலையும் சேகரித்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது சம்பிரதாய அறிவிப்பாக அதன் விதிமுறைகளில் முறைப்படி செய்யப்படுவதாக கூறியதால் அதிர்ச்சி

    English summary
    Signal had tweeted. Downloads of the app from India have increased by 79 per cent from January 1 to 6 compared to December 26 to 31 as per data from app analytics firm Sensor Tower, Times of India reported.The app is a a non profit-run encrypted messaging app.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X