• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'பிகில்' பட பாடல் லீக்... கடுப்பான விஜய் ரசிகர்கள்... நெட்டில் வைரலாகும் 'சிங்கப் பெண்ணே'

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஒரு பாடல் இணையத்தில் சற்று முன்பு லீக் ஆனது, படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து அட்லீ - விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் நடித்து வருகின்றனர். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி 'பிகில்' உருவாகி வருகிறது.

Singa Penne Song from Bigil has leaked online

விஜயின் 63-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் 'வெறித்தனம்' என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் 'பிகில்' படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

'சிங்கப்பெண்ணே...' எனத் தொடங்கும் பாடல் முழுமையாக இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார்.

சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே

நன்றி கடன் தீர்த்தற்கு கருவிலே உன்னை ஏந்துமே!

ஒருமுறை
தலைகுனி
நீ வென்ற சிங்க முகத்தை பார்பதற்கு மட்டுமே

ஏறு.. ஏறு.. ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்

என்ற வரிகளில் பாடல் விறுவிறுப்பாக போகிறது. அதே நேரம், 'பிகில்' ஷூட்டிங்கின் போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் பாடலும் லீக்காகி இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெறித்தனமாக வெயிடிங்கில் உள்ள விஜய் ரசிகர்கள், பிகில் பட பாடல் வெளியீட்டின் போது, விழா எடுத்து கொண்டாட முடிவு செய்திருந்த நிலையில், இணையதளத்தில் லீக்கான பாடல்களால் அப்செட்டில் உள்ளனர்.

டிவிட்டரில் #Singapenne, #சிங்கப்பெண்ணே என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. ரசிகர்கள் சிலர், ஏ.ஆர்.ரகுமானின் குரலில் பாடல் அருமையாக உள்ளது. சூப்பர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதே நேரம், ஒரு பாடல் கூட பத்திரம ஒழுங்கா வைக்க முடியல @agscinemas @archanakalpathi நீங்க எல்லாம் படத்த தயாரித்து என்ன பன்ன போறீங்க சொல்லுங்க என்றும் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

English summary
Singa Penne song from the film 'Vijay' starring 'Bigil' has leaked online
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X