சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - அரசு பதில் தர ஹைகோர்ட் நோட்டீஸ்

சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: 70 ஆண்டுகள் பழமையான சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து பள்ளி நிலத்தை மீட்டு தர கோரி முன்னாள் மாணவர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பள்ளியின் முன்னாள் மாணவரும் வழக்கறிஞருமான சிவசுப்பிரமணி தொடர்ந்த மனுவில்
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை கல்வி அறக்கட்டளைக்காக கடந்த 1959 ஆம் ஆண்டு ஏரி புறம்போக்கு நிலத்தை கல்வி பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஒன்றேகால் ஏக்கர் நிலப்பரப்பில் சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகின்றது

Singaram Pillai Government Aided School Land Occupancy Case - High Court Notice to TN govt

இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் சிங்காரம்பிள்ளை கல்வி அறக்கட்டளை நிர்வாகி பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட ஏரி புறம்போக்கு நிலத்தை அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் தனி நபர் சிலருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார்.

இதன் காரணமாக பள்ளிக்கு தேவையான புதிய கட்டிடம் மற்றும் வகுப்பறைகளை கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. சிங்காரம்பிள்ளை பள்ளிக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததால் சில தனிநபர்கள் அந்த நிலத்தில் பெரிய கட்டிடங்கள் கட்டி வருவதாகவும் இது தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்

நீட் தேர்வு எழுத வரும் மாணவிகளிடம் தாலியை கழற்ற சொல்வது சட்ட விரோதம் - ஹைகோர்ட்டில் வழக்குநீட் தேர்வு எழுத வரும் மாணவிகளிடம் தாலியை கழற்ற சொல்வது சட்ட விரோதம் - ஹைகோர்ட்டில் வழக்கு

மேலும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அந்த கட்டிடங்களை இடித்து பள்ளி நிலத்தை மீட்டு தர கோரியும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார், இந்த வழக்கு நீதிபதிகள் நியமனம் சுந்தரேஷ் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் சிஎம்டிஏ உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

English summary
Chennai High Court has ordered the school education secretary to file a reply in the case of Singaram Pillai, a 70-year-old government-aided school occupying land and demolishing a building.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X