சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள சொன்ன சைக்காலஜி டாக்டர்... ட்வீட் போட்ட சின்மயி

கணவனுடன் பிரச்சினை என்றால் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று ஒரு டாக்டர் கூறியதாக பெண் பதிவிட்டிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டுள்ளார் பாடகி சின்மயி.

Google Oneindia Tamil News

Recommended Video

    Chinmayi MeeToo: கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள சொன்ன சைக்காலஜி டாக்டர்.. ட்விட் போட்ட சின்மயி- வீடியோ

    சென்னை: கணவனுடன் பிரச்சினை என்றால் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று சைக்காலஜி டாக்டர் ஒருவர் கூறியுள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார். ஒரு பெண்ணிற்கு நேர்ந்த பாதிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டிருக்கிறார் சின்மயி.

    பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் அளித்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பதிவிடுவார்.

    பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

     டிவி சீரியலில் கொடுமை

    டிவி சீரியலில் கொடுமை

    சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கூடப்பிறந்த தங்கையே தனது அக்காவை கூட்டு பலாத்காரம் செய்யச் சொல்வதாக ஒருசீனை பதிவிட்டு ஒருவர் சின்மயிக்கு ட்விட்டியிருந்தார். அதற்கு அவர் இதே போல சீரியலைக் கண்டால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    சைக்காலஜி டாக்டர்

    சைக்காலஜி டாக்டர்

    இந்த நிலையில் சின்மயிக்கு பெண் ஒருவர் அனுப்பிய மெசேஜ் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. சமீபத்தில் ஒரு சைக்காலஜி டாக்டரை சந்தித்தேன். என்னிடம் தனிப்பட்ட விசயங்களை கேட்டார். யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறவே அவரை நம்பி அந்தரங்க விசயங்களை சொன்னேன். இதுவும் சிகிச்சையின் ஒரு அங்கம்தான் என்றார்.

    மருத்துவ துறைக்கு களங்கம்

    மருத்துவ துறைக்கு களங்கம்

    கடைசியில் ஆலோசனை சொல்வது போல பேசிய அவர், உங்களின் கணவரை விட்டு விட்டு வேறு யாருடனாவது தொடர்பு வைத்துக்கொண்டால் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று கூறினார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சிடைந்தேன். இதுபோன்ற மருத்துவர்கள் இருப்பது மருத்துவ துறைக்கே களங்கம் என்று அவர் கூறியுள்ளார்.

    போராடும் சின்மயி

    சின்மயி இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டுள்ளார். இதுபோன்ற டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் கேட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் தொல்லை புகார் அளித்தார். இதற்கு இந்திய பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக சின்மயி கூறியுள்ளார். சென்னை மாநகர காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    singer Chinmayi Sripaada asked her twitter page, posted a letter,Any Psychiatrists, Mental Health Professionals, Doctors on my timeline,could you please advice if this is acceptable professional behaviour? Where can a patient report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X