சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களே! சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: பெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என பாடகர் யேசுதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மே.வங்கத்திலும் வெடித்தது குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்- வன்முறையை தவிர்க்க மமதா வேண்டுகோள்மே.வங்கத்திலும் வெடித்தது குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்- வன்முறையை தவிர்க்க மமதா வேண்டுகோள்

பெண்கள்

பெண்கள்

இந்த தீர்ப்புக்கு பின்னர் பெண்கள் சபரிமலைக்கு செல்வதும் அவர்களை ஆண் பக்தர்கள் போராட்டம் நடத்தி விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள நாடார் அமைப்பு தொடர்ந்த சீராய்வு மனு குறித்து ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்தது.

பாடகர் யேசுதாஸ்

பாடகர் யேசுதாஸ்

இதையடுத்து பெண்கள் சபரிமலைக்கு வரத் தொடங்கினர். ஆனால் கேரள அரசோ அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என தெரிவித்தன. இந்த நிலையில் சென்னையில் இசை வெளியீட்டு விழாவில் பாடகர் யேசுதாஸ் கலந்து கொண்டார்.

பக்தர்களின் கவனத்தை

பக்தர்களின் கவனத்தை

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பெண்கள் சபரிமலைக்கு வந்தால் ஐயப்பனை ஒன்றும் செய்யாது. ஆனால் விரதம் இருந்து வரும் பக்தர்களின் கவனத்தை திசை திருப்பும்.

சபரிமலை

சபரிமலை

இதன் காரணமாக பெண்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காலமாற்றத்திற்கு ஏற்ப ஆண்களை போல பெண்களும் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். சபரிமலையை தவிர்த்து பெண்கள் மற்ற கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.

English summary
Singer Yesudas asked menstrual period women not to come to Sabarimala as it will deviate the men who are going their in fasting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X