India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமைக்கு மல்லுக்கட்டும் தலைவர்கள்..அதிமுகவின் அரசியல் எதிர்காலம் எப்படி - ஜோதிடரின் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இன்னும் சில மாதங்களில் பொன்விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கப்போகிறது. தலைமைக்கு தலைவர்கள் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பது தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது. கட்சி மீண்டும் பிளவுபடுமா? எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அஸ்தனமாகிறதா என்றெல்லாம் கிராமங்களில் டீக்கடை முதல் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் வரை பேசி தீர்க்கிறார்கள். அதிமுகவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்ன சொல்கிறது அதிமுகவின் ஜாதகம் என்று பார்க்கலாம்.

திமுகவில் ஏற்பட்ட பிரச்சினையால் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் தொடங்கினார்.

ஜாதகப்படி கட்சிக்கு தனுசு லக்னம், மகர ராசி. இப்போது ஏழரையால் பலரும் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். அதிமுக என்ற அரசியல் கட்சியும் தப்பவில்லை. இன்றைய சூழ்நிலையில் அதிமுகவின் எதிர்காலம் எப்படி என்பதை பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

 அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுமா? ஈபிஎஸ் பொதுச்செயலாளர் கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்? அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுமா? ஈபிஎஸ் பொதுச்செயலாளர் கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்?

அதிமுகவின் ஜாதகம்

அதிமுகவின் ஜாதகம்

அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தை வைத்து கணிக்கப்பட்ட ஜாதகத்தில் லக்னம் தனுசு, ராசி மகரம். லக்னாதிபதி குரு
லக்னத்தில் ஹம்ச யோகம் பெற்றதால் அது தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தொண்டர்களின் ஆதரவைப் பெற்ற பிரபல கட்சியாக உள்ளது. லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் பாம்பு கிரகம் கேது அமர்ந்ததால் அந்த இடம் வலுவிழந்து விட்டது. இதன் மூலம் அதிமுகவிற்கு எதிரிகளே இல்லை என்ற நிலை உருவானது.

செவ்வாய் அரசியல் கிரகம். தனசு லக்னத்திற்கு யோகரான செவ்வாய் பத்தில் அம்சமாக அமர்ந்து திக் பலம் பெற்று யோகத்தை தருகிறார். மற்றுமொரு லக்ன யோகரான சூரியன் 11ல் பிரகாசமாக அமர்ந்து லாபத்தை தருகிறார்.
சூரியனும் அரசியல் கிரகமே

செவ்வாய் சூரியன் அரசியல் கிரகங்கள் இருவரும் பலம் பெற்றதால்தான் அதிமுகவின் அரசியல் பயணம் அற்புதமாக இருந்தது. 7 முறை தமிழகத்தை ஆண்டது அதிமுக. செவ்வாய் சூரியன் நன்மை செய்பவர்கள் வலுவாக இருக்கிறார்கள். 6ஆம் இடத்தில் சனி அமர்ந்து எதிரிகளை வெல்லுவதற்கு கடின முயற்சிகளை கொடுத்து வெற்றிகளை சொந்தமாக்கினார்.

கட்சியின் ஆயுள்

கட்சியின் ஆயுள்

தனுசு லக்னத்தாருக்கு தீமை தருபவர்கள் சுக்கிரன், சனி, சந்திரன். லக்னத்தின் கடும் பாபியான சுக்கிரன் சூரியன் வீட்டில் போய் அமர்ந்துள்ளதால் தீமைகளை செய்ய முடியாது தவிக்கிறது, சுக்கிரனால் எந்த கெடுதலும் செய்ய முடியவில்லை. சனி மாரகத்தினை அடையாளம் காட்டும் கிரகம். அதாவது கட்சியின் ஆயுளுக்கு தடைகளை தரக்கூடியது.

கட்சியின் வளர்ச்சிக்கு ஆபத்து

கட்சியின் வளர்ச்சிக்கு ஆபத்து

கட்சியின் வளர்ச்சி கட்சியின் பிளவு கட்சியின் தலைமைக்கு ஆபத்து என அடையாளம் காட்டும் கிரகமாக சனி வருகிறது. சந்திரன் அட்டமாதிபதியாக வருவதால் கட்சியின் ஆயுளை அடையாளம் காட்டும் கிரகமான சந்தரன் 2ல் இருக்கிறார். இவர் மார்க்கத்தில் அமர்ந்ததால் வாக்கில் பாதகம் எனலாம். அதாவது கட்சியில் தவறாக பேச்சுக்கள் பேட்டிகள் கொடுப்பதால் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும்.

அதிமுகவிற்கு தசாபுத்தி எப்படி

அதிமுகவிற்கு தசாபுத்தி எப்படி

கட்சியினை தொடங்கியவர் எம்ஜிஆர். 1972 தொடங்கிய கட்சி முதலில் 1973 திண்டுக்கல் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 1972ம் ஆண்டு கட்சி தொடங்கிய சந்திர திசை நடந்தது. 25.5.1975 வரையில் சந்திர திசை நடந்தது. 26.5.1975 முதல் 25.5.1982 வரை செவ்வாய் திசை நடைபெற்றது. தனசு லக்னத்தின் மிக பெரிய யோகக்காரரான செவ்வாய் யோகங்களை இந்த காலத்தில்தான் அள்ளித் தந்தது,

1977ம் ஆண்டு மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது. செவ்வாய் திசையில் குரு புக்தியில் சூரியன் அந்தரம் நடக்கும் போது தமிழக ஆட்சியினை பிடித்தார் எம்ஜிஆர். 30.6.1977ல் முதல்வரானார் எம்ஜிஆர். 1987 வரையில் அசைக்க முடியாத பலத்தில் கட்சி இருந்தது. 26.5.1982 முதல் 25.5.2000 வரை ராகு திசை நடைபெற்றது. 24.12.1987 ல் எம்ஜிஆர் மறைந்த போது ராகு தெசையில் சனி புக்தி 1.7.1987முதல் 7.5.1990 வரை நடைபெற்றது. சனி ஆயுளை குறிக்கும் கிரகம் என்பதால் நிறுவனர் எம்ஜிஆரின் ஆயுளுக்கு கண்டம் ஏற்பட்டது. சனி புத்தி முடியும் வரை அதிமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கல்தான்.

1991 முதல் 1996 வரை வெற்றி

1991 முதல் 1996 வரை வெற்றி

7.5.1990 ராகு தெசையில் புதன் புக்தி ஆரம்பமானது. புதன் கட்சி ஜாதக லக்னத்திற்கு 7 10க்குரியவர் வலுவாக 11ல் சூரியனுடன் அமர்ந்ததால் கட்சியினை எழுந்து நிற்க வைத்தார். 1991ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியினை பிடித்தது. 1996ம் ஆண்டு சனி தசையில் சுக்கிரன் புக்தி வந்தபோது பழி வாங்கியது. தனசு லக்னத்திற்கு சுக்கரன் கடுமையான தீய பலன்களை கொடுக்கக் கூடியவர். கட்சியினை தோல்வியிலிருந்து ஜாதகம் காப்பாற்றவில்லை.

வெற்றி தோல்விகள்

வெற்றி தோல்விகள்

26.5.2000 முதல் 25.5.2016 வரையில் குரு தசை நடைபெற்றது. தனசு லக்னத்திற்கு குரு ஹம்ச யோகத்தினை தருபவர் என்பதால் நன்மைகள் தேடி வந்தது. மீண்டும் அரசியனை ஏறியது அதிமுக. குரு திசையில் மாறி மாறி வெற்றி தோல்வியை சந்தித்தது. குரு திசையில் சனி புக்தி 13.7.2002 முதல் 24.1.2005 வரை நடைபெற்ற போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிக்கல்களை சந்தித்தார். கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டது. 2006ல் தோல்வி ஏற்பட்டது. 2006ல் ஆட்சியை இழந்த அதிமுக 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம்


2011ல் சூரியன் புக்தி வந்தது கட்சி ஆட்சியினை பிடித்தது. சூரியனும் செவ்வாயும் கட்சிக்கு நண்பர்கள் என்பதால் அந்த கால கட்டத்தில் நல்லதே நடைபெற்றது.
சூரியன் சந்திரன் செவ்வாய் ராகு என தொடர்ச்சியான நல்ல பலன்கள் கொடுக்கும் கிரகங்கள் புக்தி நடைபெற்றது. 25.5.2016 முதல் 26.5.2035 வரை அதிமுகவிற்கு சனி தசை காலமாகும். ராகு திசை சனி புத்தியில் எம்ஜிஆரை இழந்தது கட்சி. அதே போல சனி தசை சனிபுத்தி நடைபெற்ற காலத்தில் ஜெயலலிதாவை இழந்தது. 25.5.2016 முதல் 28.5.2019 வரை சனி புத்தி நடைபெற்றது. சின்ன பிளவு கட்சி, சின்னம் முடக்கம், மீண்டும் ஒன்று பட்ட அதிமுக என பல பிரச்சினைகளை சந்தித்தது.

அதிகார போட்டி

அதிகார போட்டி

சனி தசையில் புதன் புக்தியானது 29.5.2019 முதல் 5.2.2022 வரையில் நடைபெற்றது. அந்த கால கட்டத்தில்தான் தமிழகத்தில் பொது தேர்தல் நடைபெற்றது. நெருக்கடிகளை சந்தித்து ஆட்சியை இழந்தது. 5.2.2022 முதல் 17.3.2023 வரை அதிமுக ஜாதகப்படி கேது புத்தி நடக்கிறது. இது கடுமையான சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. கட்சியில் தலைமையில் இருப்பவர்களிடையே அதிகார போட்டியை உருவாக்கியுள்ளது.

 2026 ல் அதிமுக அரியணை ஏறும்

2026 ல் அதிமுக அரியணை ஏறும்

சனி தசையில் சுக்கிர புக்தியானது 17.3.2023 முதல் 16.5.2026 வரையில் நடைபெறுகிறது. கட்சியில் பிளவு ஏற்பட்டு கட்சியிலிருந்து பலர் விலகுவார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதே நேரத்தில் 2026 ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறும் போது சனி தெசையில் சூரிய புக்தி வரும் போது அதிமுக மீண்டும் ஆட்சியினை பிடிப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

English summary
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) formed on 17 October 1972 at 10:30 IST in Chennai by MGR.All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) formed on 17 October 1972 at 10:30 IST in Chennai by MGR. Anna Dravida Munnetra Kazhagam is all set to make inroads in a few more months during the Golden Jubilee year. Let's see what the AIADMK's political future looks like.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X