சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாஷ்.. இதான் முருகன்.. மெகா புள்ளியையே தட்டி தூக்கிட்டாரே.. காங். குடும்பத்தையே வளைத்து.. செம

சிவாஜி குடும்பத்தை வளைத்து பாஜகவில் இணைய வைத்துவிட்டார் எல்.முருகன்

Google Oneindia Tamil News

சென்னை: யார் என்ன சொன்னாலும் சரி, ஒரு விஷயத்தில் எல்.முருகனை பாராட்டியே ஆக வேண்டும்.. குறி வைத்து ஒவ்வொருவரையும் தன் கட்சியில் சேர்த்து வருகிறார்...!

எல்.முருகன் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, பலவித அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்.. குஷ்பு உட்பட பலதரப்பட்ட பிரமுகர்களை கட்சியில் இணைத்தும் வருகிறார்..

அதிலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை கட்சியில் இணைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.. பிரபலங்கள் பலரும் பாஜகவில் தங்களை தானாகவே இணைத்து கொண்டும் வருகிறார்கள்.

இந்த பிரமுகர்களால் தாமரை எதிர்பார்த்தபடி மலர போவதில்லை என்றாலும், பிரச்சார நேரங்களில் நிச்சயம் இவர்கள் அனைவரும் திரும்பி பார்க்க வைப்பார்கள் என்று நம்பப்படுகிறது.. அந்த வகையில், இப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரையும் பாஜகவில் இணைக்கும் முயற்சி நடந்துள்ளது... இதுதான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

 காமராஜர்

காமராஜர்

இதற்கு காரணம், சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் திராவிட இயக்க அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தவர்.. பிறகு, காமராஜரை தலைவராக ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்... இந்திராகாந்தி, காமராஜர் மீது அபரிமிதமான மரியாதையையும், பிடித்தத்தையும் கொண்டிருந்தார். அவர்கள் மறைவுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக் கட்சியை தொடங்கினார்.

தோல்வி

தோல்வி

பிறகு, அதிமுக - ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து, போட்டியிட்டு தோல்வி அடைந்தார்... அதற்கு பிறகு, தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு, விபி சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.. கொஞ்ச காலம் அந்த கட்சியின், தமிழக தலைவராக இருந்தார்... அவ்வளவுதான்.. அதற்கு பிறகு அவரால் அரசியலில் தாக்கு பிடிக்க முடியவில்லை.. நிரந்தரமாகவே அரசியலை விட்டு விலகினார்.

சாதனை

சாதனை

சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்திய சிவாஜியால் அரசியலில் தோல்வி முகத்தைதான் சந்திக்க முடிந்தது.. ஆனாலும் சிவாஜி என்றாலே காங்கிரஸின் அதி தீவிர அபிமானி என்ற பெயர்தான் இன்றும் தமிழ்நாட்டில் இருக்கிறது.. அதனால்தான் கடந்த வருடம், பிரபுவை, காங்கிரஸ் கட்சியில் இணைக்கும் முயற்சிகள் கூட எடுக்கப்பட்டது.. ஆனால் பிரபுதான் மறுத்து விட்டார். இப்படிப்பட்ட சூழலில்தான் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தன்னுடைய மகனுடன் பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வந்தன..

 முருகன்

முருகன்

ஒருவேளை இதுவும் பிரபு விவகாரம்போல வதந்தியாக இருக்குமோ என்று கருதப்பட்டது.. ஆனால், அதை ராம்குமாரே உறுதிப்படுத்தி உள்ளார்.. இதுபோதாதென்று பிரபுவும் உறுதிப்படுத்தி விட்டார். முன்னதாக, மதுரையை சேர்ந்த, பாஜக நிர்வாகிகளுடன், ராம்குமார் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.. இன்று பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த ராம்குமார் கட்சியின் தலைவர் முருகனையும் நேரில் சந்தித்து பேசினார்...

பாஜக

பாஜக

அநேகமாக நாளை, முறைப்படி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகுதான் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், "நடிகர் திலகம், காங்கிரஸ் கட்சியை தழுவி இருந்தாலும் இப்போது நான் மோடியின் ரசிகர்.. அதனால்தான் பாஜகவில் இணைக்கிறேன்... நான் பாஜகவில் இணைய போகிறேன் என்று கட்சி தலைவரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்.. அவர் எனக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்" என்றார்.

ரசிகர்

ரசிகர்

மோடி 7 வருஷமாக பிரதமராக இருந்து வரும் நிலையில், இவரது ரசிகர் என்று ராம்குமார் இப்போது சொல்லித்தான் நமக்கு தெரிகிறது.. அதுமட்டுமல்ல, எதற்காக பாஜகவில் இணைகிறார் என்ற காரணம் தெரியவில்லை.. ஆனால், சிவாஜியாலேயே தாக்கு பிடிக்க முடியாததை, அவர்கள் பிள்ளைகளாவது செய்வார்களா என்பதும், சிவாஜியின் புகழுக்கு இது பெருமை சேர்க்குமா என்பதும், இனிமேல்தான் தெரியும்..!

English summary
Sivaji Ganesan son Ramkumar joins BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X