சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்... விலை 1 கிலோ 100 ரூபாய்

மழையால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் விடுகின்றனர் இல்ல

Google Oneindia Tamil News

சென்னை: வெங்காயம் உரிக்க உரிக்கத்தான் கண்ணீர் வரும். இப்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் வெங்காயத்தின் விலையைக் கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் விடுகின்றனர் இல்லத்தரசிகள். சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஒருகிலோ சின்ன வெங்காயம் கிலோ 100 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வெங்காய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. மழையால் தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெங்காயம் குறைவான அளவே வருவதால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Small onion that brings tears without peeling Price 1 kg 100 rupees

மதுரை மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த ஒரு சில வாரங்களாகவே உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள நிலங்களில் சின்ன வெங்காயம் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டுள்ள செடிகளில் இன்னும் விளைச்சல் ஏற்படாததால், சந்தையில் சின்ன வெங்காயத்தின் வரத்து அடியோடு குறைந்துள்ளது.

பழிக்குப் பழி.. இந்த கொலையுடன் நிறுத்த மாட்டோம்.. சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம் பழிக்குப் பழி.. இந்த கொலையுடன் நிறுத்த மாட்டோம்.. சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

போதுமான வரத்து இல்லாத காரணத்தால் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூபாய்100 ஆக உயர்ந்துள்ளது. பொதுவாக ஆண்டிப்பட்டி காய்கறி சந்தைக்கு சராசரியாக ஒருநாளைக்கு 50 டன் வரையில் சின்னவெங்காயம் வரத்து இருக்கும். அதனால் தற்போது ஒருநாளைக்கு 500 முதல் ஒரு டன் வரையிலான வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

Small onion that brings tears without peeling Price 1 kg 100 rupees

வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயத்தை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா, கர்நாடகாவில் மழை தீவிரமடைந்துள்ளது. பண்டிகை காலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும். என்பதால் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

English summary
Tears come only when the onion is peeled. Housewives shed tears when asked about the price of onions sold in the market now. In Chennai and southern districts, small onions sell for Rs. 100 per kg. Large onions sell for as little as 80 rupees a kilo. Onion traders said prices have gone up due to lack of supply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X