சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம்.. திமுக கேம்பில் அடுத்தடுத்து இப்படி நடக்குதே.. அதுதான் காரணமோ?

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் நெருங்க நெருங்க திமுக கேம்பில் நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.. கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவிற்கு இன்று மட்டும் திமுக கேம்பில் மூன்று முக்கியமான "சேர்க்கைகள்'' நடந்து இருக்கிறது.

திடீர் திடீர்னு உடையுதாம்.. சாயுதாம் என்று சந்திரமுகி படத்தில் வரும் வசனம் போலத்தான் தமிழக அரசியலில் இன்று நிறைய அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன. சட்டசபை தேர்தலுக்காக வலுவான கூட்டணியை அமைக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. லோக்சபா தேர்தலில் அமைத்தது போன்ற வலுவான கூட்டணியை அமைக்கும் முடிவில் திமுக தீவிரமாக உள்ளது. இதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.

லோக்சபா தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற ஐஜேகேவை தவிர திமுக கூட்டணியில் எல்லா கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக இன்று கூட்டணி உடன்படிக்கை மேற்கொள்ளும். மற்றபடி அனைத்து கட்சிகளுடன் திமுக கூட்டணி உடன்படிக்கையை மேற்கொண்டு விட்டது.

பெங்களூர் வளர்ச்சிக்கு ரூ.7,795 கோடி.. வருகிறது புறநகர் ரயில் திட்டம்! பட்ஜெட்டில் எடியூரப்பா தாரளம்பெங்களூர் வளர்ச்சிக்கு ரூ.7,795 கோடி.. வருகிறது புறநகர் ரயில் திட்டம்! பட்ஜெட்டில் எடியூரப்பா தாரளம்

உடன்படிக்கை

உடன்படிக்கை

காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் எல்லாம் திமுக கூட்டணியில் தொடர்கிறது. கிட்டதட்ட 180 இடங்களை வைத்துக்கொண்டு திமுக மற்ற இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக சற்று நேரத்தில் கூட்டணி மேற்கொள்ளும்.

வாழ்வுரிமை கட்சி

வாழ்வுரிமை கட்சி

திமுக கூட்டணிக்கு கடந்த லோக்சபா தேர்தலில் ஆதரவு அளித்து வாக்கு சேகரித்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் இந்த முறை திமுக ஒரு இடம் வரை கொடுக்கும் என்கிறார்கள். திமுக கொடுக்கும் இடத்தை வாங்கிக்கொள்வோம், திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வேல்முருகனும் கூறிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் கடந்த சட்டசபை தேர்தலில் இடம்பெற்ற குட்டி கட்சிகள் திமுக கேம்பிற்கு தாவ தொடங்கி உள்ளன.

கடந்த தேர்தல்

கடந்த தேர்தல்

கடந்த சட்டசபை அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இந்த முறை திமுக கூட்டணியை ஆதரிக்க போவதாக கூறியுள்ளார்.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

இதற்காக அவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியிலும் இணைந்துவிட்டார். இது போக எப்போதும், ஏன் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக-வுக்கே ஆதரவு அளித்து வந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் இந்த முறை திமுகவிற்கு ஆதரவு கொடுக்கும் முடிவில் இருக்கிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக கேம்பில் இப்படி முன்னாள் அதிமுக கூட்டணி கட்சிகள் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரணம்

காரணம்

திடீரென இந்த மாற்றம் நடக்க என்ன காரணமாக இருக்கும் என்று கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் மறைவு காரணமாக இந்த கட்சிகள் திமுக பக்கம் செல்கிறதா என்று கேள்வி ஒரு பக்கம் உள்ளது. அல்லது முதல்வர் இபிஎஸ் அதிரடியாக செயல்பட்டு தொகுதி ஒதுக்க மறுத்தாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. சசிகலா சென்ற காரணத்தால் கருணாஸ் போன்றவர்கள் கூட்டணி மாறி இருப்பார்களோ என்றும் எண்ண தோன்றுகிறது.

பாஜக

பாஜக

இதுபோக அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் மஜக மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரண்டும் அதிமுகவிற்கான ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. திமுக பக்கம் கருணாஸ் மற்றும் அன்சாரி சென்று இருந்தாலும் அவர்களுக்கு தேர்தலில் இடம் ஒதுக்கப்படுமா.. அல்லது ஸ்டாலின் மனதில் மட்டும் இடம் கொடுப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

English summary
Small parties from ADMK camp joining in the DMK alliance ahead of the assembly election in Tamilnadu. Small parties from ADMK camp joining in the DMK alliance ahead of the assembly election in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X