தமிழன் பிரசன்னாவின் நக்கல் டிவீட்.. திமுகவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended Video

சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழன் பிரசன்னா போட்ட நக்கல் டிவீட்டால் திமுகவுக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜபக்சே திடீர் பிரதமராகியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கேவை டிஸ்மிஸ் செய்து விட்டு அவரது இடத்தில் ராஜபக்சேவைக் கொண்டு வந்துள்ளார் சிறிசேனா. அவரது செயலால் உலகத் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சீரியஸான வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடு பிடித்துள்ளன. ஆனால் திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா நக்கல் நையாண்டியாக ஒரு டிவீட் போட்டு வாங்கிக் கட்டி வருகிறார்.
அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... pic.twitter.com/qKN5fr4G3C
— தமிழன்பிரசன்னா (@PrasannaTamilan) October 26, 2018
ராஜபக்சே பதவியேற்பு தொடர்பாக கருத்துப் போட்ட அவர் அதில் தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை இழுத்துள்ளார். அண்ணன் சீமான் எங்கு இருந்தாலும் உடனே AK-74 யை எடுத்துக்கொண்டு மேடைக்கு (ஈழத்திற்கு) வரவும்... என்று தனது டிவீட்டில் போட்டுள்ளார் தமிழன் பிரசன்னா. இதனால் பலரும் கொந்தளித்து தமிழன் பிரசன்னாவுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவையும் இதில் இழுத்து கடுமையாக சாடி வருகின்றனர்.
தமிழன் பிரசன்னா போட்ட டிவீட்டால் தற்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடி பதிவிட்டு வருகின்றனர். அவர் தவிர மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரையும் கடுமையாக விமர்சிக்கும் பதிவுகளும் குவிந்து வருகின்றன.
[இலங்கையில் யார் யாருக்கு எத்தனை எம்.பிக்கள்.. இதோ லிஸ்ட்!]
சீரியஸான விஷயத்தில் ஏன் இப்படி நக்கல் நையாண்டியான கருத்தைப் பதிவிட்டார் தமிழன் பிரசன்னா என்பது தெரியவில்லை. ராஜபக்சே பதவிக்கு வந்தது என்னவோ, சீமானுக்குச் சம்பந்தமானது என்பது போல அவர் கேலி செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பதிவுக்கு வரும் எதிர் வினைகள் பலவற்றைப் படிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு வசவுகள் பலமாக இருக்கிறது.
{document1}
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications