சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முகிலனுக்கு கிடைத்தது ஜாமீன்.. 3 நாளைக்கு ஒருமுறை கையெழுத்து போட வேண்டும்.. ஹைகோர்ட் பெஞ்ச் உத்தரவு

முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது மதுரை ஐகோர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    social acitivist mugilan got conditional bail from madurai high court

    சென்னை: பாலியல் புகாரில் கைதான சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கி மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் முகிலன் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தொடர்ச்சியாக ஸ்டெர்லைட், மணல் கொள்ளை, ஜல்லிக்கட்டு, அணுஉலை எதிர்ப்பு போராட்டம், என பொதுமக்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி கார்பரேட் கம்பெனிக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்களை முன் நடத்தியவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன்.

    இதன்காரணமாக, குண்டர் சட்டம் உள்ளிட்ட பல கேஸ்கள் இவர் மீது போடப்பட்டாலும் சரி, சிறைக்கு பலமுறை அனுப்பினாலும் சரி, போலீஸ் தடியடிகளுக்கு ஆளானாலும் சரி, மக்களுக்கு ஆதரவான இவர் குரல் ஓங்கி ஒலித்து கொண்டே இருந்தது. அதனால்தான் இவர் காணாமல் போன தினத்திலிருந்தே இவருக்கு ஆதரவான குரலை மக்களே எழுப்ப தொடங்கினர்.

    சபரிமலை.. பெண்கள் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதிக்க என்ன காரணம்? சீராய்வு மனுவில் கூறப்பட்டது என்ன?சபரிமலை.. பெண்கள் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதிக்க என்ன காரணம்? சீராய்வு மனுவில் கூறப்பட்டது என்ன?

    மனு தாக்கல்

    மனு தாக்கல்

    கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சென்னை எக்மோர் ஸ்டேஷனில் மாயமான இவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனில் போலீசார் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இதையடுத்து, ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் முகிலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக போலீசாரின் நற்பெயரை முகிலன் களங்கப்படுத்தி விட்டார், அதனால் அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அரசு வழக்கறிஞர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    தலைமறைவு

    தலைமறைவு

    இந்த மனுமீதான விசாரணையின்போது, "கடந்த பிப்ரவரி மாதம் 15 முதல் ஜூலை 6 வரை எங்கே தலைமறைவாக இருந்தீர்கள்.. அதை தெரிவித்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கிறோம்" என்று நீதிபதி சொன்னார். இதையடுத்து, முகிலன் சார்பில் பரபரப்பு தகவல்கள் அடங்கிய பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

    நிபந்தனை

    நிபந்தனை

    இதனிடையே, முகிலன் மீது பாலியல் புகார் அளித்த குளித்தலையை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணும், முகிலனுக்கு ஜாமீன் தரக்கூடாது என கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முகிலனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் கரூர் சிபிசிஐடி ஸ்டேஷனில் 3 நாட்களுக்கு ஒருமுறை முகிலன் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    social acitivist mugilan got conditional bail from madurai high court in sexual allegations case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X