சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை சூரிய கிரகணம்.. நெருப்பு வளையமாக.. தமிழகத்தில் இங்கெல்லாம் தெளிவாக தெரியும்!

Google Oneindia Tamil News

சென்னை: டிசம்பர் 26ம் தேதி (நாளை) மிகவும் அரிதான சூரிய கிரகணம் நிகழப்போகிறது. நெருப்பு வளையமாக தெரியப்போகும் இந்த கிரகணத்தை தமிழகத்தின் கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க முடியும்..

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.

இதன்படி பூமிக்கும் சூரியனுக்கு நடுவில் சந்திரன் நாளை வரப்போகிறது. அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்க உள்ளது. இதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும். இதனை சாதாரண கண்களில் நேரடியாக பார்க்கக் கூடாது.

இசை உலகின் கதாநாயகன்.. லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் மறைவுக்கு .ஸ்டாலின் இரங்கல்இசை உலகின் கதாநாயகன்.. லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் மறைவுக்கு .ஸ்டாலின் இரங்கல்

சிறப்பாக தெரியும்

சிறப்பாக தெரியும்

இதுபற்றி இந்திய விண்வெளி ஆய்வு மையம் இது பற்றி கூறுகையில், நாளை சூரிய கிரகணம் ‘நெருப்பு வளையமாக' தெரியும். 'தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் பகுதியில் சிறப்பாக தெரியும்

திருப்பூர் கோவை

திருப்பூர் கோவை

தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதியில் சூரிய கிரணகத்தை பார்க்க தெளிவாக முடியும். இதேபோல் கேரளாவின் கோழிக்கோடு பகுதியிலும் கர்நாடகாவின் மங்களூரு ஆகியவை ஆகிய இடங்களும் சூரிய கிரகணத்தை பார்க்க சிறந்த இடங்கள் ஆகும்.

நேர விவரம்

நேர விவரம்

பகுதி கிரகணம் காலை 8.06 மணிக்கு தொடங்கும், அதிகபட்ச கிரகணம் காலை 9.29 மணிக்கு இருக்கும். பகுதி கிரகணம் காலை 11.10 மணிக்கு முடிவடையும் என்று விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2031ம் ஆண்டு

2031ம் ஆண்டு

டிசம்பர் 26ம் தேதி (நாளை) ஏற்படக்கூடிய சூரிய கிரகணத்திற்கு பிறகு 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் இதுபோன்ற அரிதான சூரிய கிரணகம் நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

English summary
the partial eclipse will begin at tomorrow 8.06am, while the maximum eclipse will be at 9.29am The partial eclipse will end at 11.10am. The best places to view it from, according to multiple agencies tracking the event, are Tiruppur, Coimbatore, Dindigul, Trichy, Kozhikode and Mangaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X