சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எகிறும் பிரஷர்.. "திமுகவின் பல முன்னணி தலைவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்".. யாரை சொல்கிறது பாஜக?

முன்னணி திமுக தலைவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "திமுகவில் அதிருப்தியில் உள்ள பல முன்னணி தலைவர்கள் தங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்" என்று மறுபடியும் தெள்ளத் தெளிவாக சொல்லி உள்ளது பாஜக.. இதனால் யார் அந்த முன்னணி தலைவர்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைந்த சந்தேகம் திமுக உட்பட தமிழக அரசியல் களத்தில் எழுந்து வருகிறது!

அதிமுக கூட்டணியில் இருந்தாலும், எதிர்பார்த்த லாபமும், தலைவர்களுக்கு உரிய மரியாதையும் தரப்படுவதில்லை என்ற வருத்தம் பாஜகவுக்கு ஏற்கனவே உள்ளது.

Some DMK members are touch with BJP, says State General Secretary

இருந்தாலும், வரும் தேர்தலில் 60 சீட்டுக்கு அடிபோட்டுள்ளார் மாநில தலைவர்.. இந்த கோரிக்கை முருகன் விடுத்து இத்தனை நாள் ஆகியும் அதிமுக தரப்பில் பெரிய அளவிலான ஆதரவு ரியாக்‌ஷன் இன்னும் இல்லை.
இது ஒருபக்கம் இருந்ததாலும், திமுகவை எதிர்க்கும் போக்கு பாஜக தரப்பில் குறைந்து வருகிறது.. ஸ்டாலினை தினமும் எதிர்த்து கொண்டிருப்பதால், தமிழக பாஜகவுக்கு லாபம் இல்லை என்பதும் உணர்ந்து வருவதுபோல தெரிகிறது.. அதனால், திமுகவிடமிருந்து காங்கிரஸை பிரிக்கும் முயற்சியில் இறங்கலாம் அல்லது திமுகவிடம்கூட கூட்டணியும் அமைக்கலாம் என்ற ஒரு சலசலப்பு சில மாதங்களாகவே தமிழகத்தில் நிலவி வருகிறது.

இப்படிப்பட்ட அனுமானங்கள் உலவும் நேரத்தில்தான், திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்ததற்கு பாஜக பாராட்டு தெரிவித்திருந்தது.. குறிப்பாக, குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடு இந்த மீட்டிங் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தியதுடன், ஸ்டாலினுக்கு தன்னுடைய பாராட்டையும், வாழ்த்தையும் அனுப்பினாராம்! இது நேற்றில் இருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக ஏன் திமுகவுக்கு வாழ்த்து சொன்னது என்ற சந்தேகமும் அதிகமாகி உள்ளது.

இப்படித்தான், ரஜினிகாந்த் துரைமுருகன்- டிஆர் பாலுவுக்கு வாழ்த்து சொன்னபோதும் எழுந்தது.. அதுமட்டுமல்ல, திமுகவின் சில மூத்த தலைவர்களும் அதிருப்தியில் உள்ளவர்களும் பாஜகவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவருகிறார்கள் என்று எல்.முருகன் ஒருமுறை தெரிவித்திருந்தார்.. அதுபோலவே, திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்ற விபி துரைசாமியும் கூறியிருந்தார்.

இதே கருத்தை தமிழக மாநில பொதுச்செயலாளரான சீனிவாசனும் கூறியுள்ளார். பெரம்பலூரில் நேற்று நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் இப்படி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, "திமுகவின் பல முன்னணி தலைவர்கள் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.. அவர்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்... தமிழகத்தில் திமுக, ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை... தமிழகத்தில் திமுகதான் எங்கள் அரசியல் மற்றும் சித்தாந்த எதிரி... இந்திய தேசியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத, பிரிவினைவாதத்தை தூண்டுகிற, ஒரு மொழியை, ஒரு தரப்பினரை எதிர்க்கிற விகாரமான கட்சி அது.

கொரோனா முடிஞ்சது! எதுக்கு லாக்டவுன்?தேர்தல் பேரணி நடத்துங்க.. சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்கொரோனா முடிஞ்சது! எதுக்கு லாக்டவுன்?தேர்தல் பேரணி நடத்துங்க.. சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்

அதுமட்டுமல்ல, ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்... தமிழக அரசு, பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்து ரூ.110 கோடி அளவுக்கு பணத்தை மீட்பதில் அக்கறை காட்டிவருகிறது... அதிமுகவின் முக்கிய எதிரியும் திமுக என்பதால் நாங்கள் இருவரும் நண்பர்களாக உள்ளோம்... பல விஷயங்களில் எங்களோடு ஒத்துப்போவதால் அதிமுகவுடன் நண்பர்களாக உள்ளோம்"என்றார்.

கூட்டணி கட்சி என்பதால் அதிமுகவை விட்டுத்தராமல் பாஜக பேசுவது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் இந்த பேட்டி மூலம் நமக்கு 2 விஷயம் தெரியவருகிறது.. எல்.முருகன் ஏற்கனவே 60 சீட் கேட்டு, அதற்கு எந்த சிக்னலும் அதிமுக காட்டி வராத நிலையில், "ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்" என எதற்காக இவர் சொல்கிறார் என தெரியவில்லை. வழக்கு போடுவதாக இருந்தால் தமிழகத்தில்தான் நிறைய போட வேண்டும் என்று முருகன் சொல்லி இருந்த நிலையில், இந்த பேச்சு எதை உணர்த்துகிறது? என்பதும் கவனிக்கத்தக்கதே.

அதேபோல, இந்த பாஜக தலைவர்கள் சொல்வதுபோல, "திமுகவில் உள்ள பல முன்னணி தலைவர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்களா?" அப்படி இருந்தால் யார் அந்த முன்னணி தலைவர்கள்? தேர்தல் வரும் சமயத்தில் ஏதாவது விவகாரம் திமுகவுக்குள் கிளம்புமா என்ற பல கேள்விகளையும் இந்த பேட்டி எழுப்பி வருகிறது.

English summary
Some DMK members are touch with BJP, says State General Secretary
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X