சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தாலும் சில மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஓரளவிற்கு வெப்பம் தணிந்துள்ளது.

Some places of Tamil Nadu will get normal rain: IMD

இந்நிலையில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் இன்று வெப்பம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை பெரியநாயக்கன் பாளையம், நெல்லை செங்கோட்டையில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மீண்டும் பிரதமர் பதவி.... ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்கிறார் மோடி? மீண்டும் பிரதமர் பதவி.... ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு செல்கிறார் மோடி?

இதனிடையே வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் ஆலங்கட்டி உடன் கனமழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் ஆலங்கட்டி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Some places of Tamil Nadu will get normal rain said Chennai meteorological center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X