சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்.. தந்தையின் கடையில் 14 கிலோ தங்கம் திருடிய மகன்.. சென்னையில் ஷாக்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை ஈடுகட்ட தந்தையின் நகைக் கடையில் 14 கிலோ தங்க நகைகளை திருடி நாடகமாடிய அவரது மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் வசித்துவருபவர் ராஜ்குமார் சோப்ரா (42). கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தனது நண்பரான சுபாஷ் சந்த் போத்ராவுடன் இணைந்து 20 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறார்.

200 கிலோ ஐஸ்கட்டிகள்.. இரண்டரை மணி நேரம்.. ஐஸ்பெட்டிக்குள் ஒரு சாதனை.. அசர வைக்கும் ஆஸ்திரியா மனிதர்200 கிலோ ஐஸ்கட்டிகள்.. இரண்டரை மணி நேரம்.. ஐஸ்பெட்டிக்குள் ஒரு சாதனை.. அசர வைக்கும் ஆஸ்திரியா மனிதர்

யானைகவுனி

யானைகவுனி

இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி கடையை மூடிவிட்டு மீண்டும் 24-ஆம் தேதி கடையை திறந்த போது கடையில் உள்ள லாக்கர்கள் திறக்கப்பட்டு 14 கிலோ தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆணையர்

ஆணையர்

குற்றவாளிகளை கைது செய்ய சென்னை ஆணையர் மகேஷ்குமாரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர். அதில் ராஜ்குமாரின் பார்ட்னரான சுபாஷ் சந்த் போத்ராவின் மகன் ஹர்ஷ்கோத்ரா கடந்த 21-ஆம் தேதி கடை இருக்கும் தெருவில் மிகப் பெரிய பையுடன் நடமாடியது தெரியவந்தது.

தங்க நகைகள்

தங்க நகைகள்

இதை வைத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹர்ஷ்கோத்ராவை பிடித்து விசாரித்ததில் தங்க நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து 11.5 கிலோ தங்க நகைகள், இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பரபரப்பு

பரபரப்பு

கைது செய்யப்பட்ட ஹர்ஷ்கோத்ரா கூறுகையில் ஆன்லைன் டிரேடிங்கில் 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்கவே கடையிலிருந்து தங்க நகைகளை திருடினேன் என ஹர்ஷ்கோத்ரா தெரிவித்தார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Son looted 14 kg of gold in Father's partnership jewellery shop in Chennai Loss because of loss in Online trading.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X