சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர் வந்தால்தான் சரியாக இருக்கும்.. சோனியா களமிறங்க இதுதான் காரணம்.. காங். அசத்தல் பிளான்!

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சோனியா காந்தி ஆக்ட்டிவாக இறங்குவதற்கு நிறைய காரணங்கள், திட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    3-ஆவது அணி உருவாக்கத்தை தடுக்க காங். போடும் வியூகம்- வீடியோ

    சென்னை: காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சோனியா காந்தி ஆக்ட்டிவாக இறங்குவதற்கு நிறைய காரணங்கள், திட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. இந்த முடிவுகளுக்காகத்தான் தற்போது நாடு முழுக்க காத்து இருக்கிறது.

    லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டுக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இது தேசிய கட்சிகளை கவலையில் தள்ளி இருக்கிறது.

    காந்தி ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்ட்.. கோட்சே ஒரு டெர்ரரிஸ்ட்.. திருமாவளவன் பேச்சால் சர்ச்சை காந்தி ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்ட்.. கோட்சே ஒரு டெர்ரரிஸ்ட்.. திருமாவளவன் பேச்சால் சர்ச்சை

    எதிர்க்கட்சிகள் பிளான்

    எதிர்க்கட்சிகள் பிளான்

    இதனால் லோக்சபா தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறது. 21 கட்சிகள் பெரும்பாலும் லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் இதில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விதான் தற்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    மொத்தம் எதிர்கட்சியில் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அதில் மூன்று பேருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி மமதா பானர்ஜி, மாயாவதி ஆகியோர் இந்த பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள். இது இல்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான ரேஸில் முன்னிலையில் உள்ளார்.

    காங்கிரஸ் திட்டம் என்ன

    காங்கிரஸ் திட்டம் என்ன

    காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை வென்றால், எதிர்க்கட்சி கூட்டணியில் தனித்த பெரிய கட்சியாக இருக்கும். இதை காரணம்காட்டி பிரதமர் பதவி தங்களுக்குத்தான் வேண்டும் என்று காங்கிரஸ் வாதம் செய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது காங்கிரஸ் 120+ இடங்களை வென்றால், கண்டிப்பாக பிரதமர் பதவியை கேட்க வாய்ப்புள்ளது.

    எதிர்க்கட்சிகளின் திட்டம்

    எதிர்க்கட்சிகளின் திட்டம்

    ஆனால் காங்கிரசால் கண்டிப்பாக எதிர்க்கட்சிகளின் உதவி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. இதனால் எதிர்க்கட்சிகள் ராகுலை பிரதமர் பதவியை ஏற்க அனுமதிக்காது என்கிறார்கள். காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பிரதமர் ஆனது போதும். மாநில தலைவர் பிரதமராகட்டும் என்ற மனநிலையில் தற்போது மாநில தலைவர்கள் இருக்கிறார்கள்.

    ராகுலிடம் பேச முடியாது

    ராகுலிடம் பேச முடியாது

    ஆனால் ராகுலிடம் இதை நேரடியாக பேச முடியாது. வேறு ஒரு நபரை பிரதமராக முன்னிறுத்துவது குறித்து ராகுலிடம் நேரடியாக பேசுவது கடினம். இதனால் எதிர்க்கட்சிகள் எப்படி கூட்டணி வைக்கும், எப்படி பேச்சுவார்த்தை நடத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சோனியா வருகை

    சோனியா வருகை

    இந்த நிலையில்தான் சோனியா காந்தி மீண்டும் காங்கிரசில் தீவிரமாக செயலாற்ற தொடங்கி உள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரையும் மே 23ம் தேதி இவர் சந்திக்க உள்ளார். மாயாவதி, மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் என்று எல்லோரையும் இவர் சந்திக்க உள்ளார். பல முக்கிய திட்டங்களை இவர் மனதில் வைத்துள்ளார் என்கிறார்கள்.

    என்ன

    என்ன

    அதன்படி சோனியா வருகைக்கு பின் ராகுலை சமாதானப்படுத்தும் திட்டம் காரணமாக சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ராகுலிடம் பேச தயங்கும் போது சோனியா சமாதானம் செய்ய வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகளையும், ராகுலையும் இணைக்கும் பாலம் போல சோனியா செயல்படுவார் என்கிறார்கள். ராகுலிடம் பேச கூடிய இரண்டு பேரில் ஒருவர் சோனியா.. இன்னொருவர் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

    எப்படி நடக்கும்

    எப்படி நடக்கும்

    அதேபோல் சோனியா காந்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் வல்லமை கொண்டவர். மாயாவதி, மமதா, அகிலேஷ் ஆகியோருடன் நட்பாக இருக்க கூடியவர். ஆனால் ராகுலுக்கும் இவர்களுக்கும் இடையில் ஈகோ பிரச்சனை இருக்கிறது. இதை சரி கட்டவே சோனியா களமிறங்கி இருக்கிறார் என்கிறார்கள். சோனியாவின் வருகை கூட்டணி கட்சிகள் இடையே இப்போதே இணக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    English summary
    Sonia Gandhi Step in Active: This is the reason behind Congress's new plan for LS elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X