சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குவியும் பிரச்சினைகள்.. குமுறும் தலைவர்கள்.. முழு நேர தலைவர் இல்லாமல்.. தட்டு தடுமாறும் காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு முழு நேர தலைவர் இல்லாததால், ஒரு தேசிய கட்சியான காங்கிரஸ் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்குள் தத்தளித்து காணப்படுகிறது... இதனால் நாளுக்கு நாள் அது தன் வலுவை இழந்தும் வருகிறது.

விழுந்து கிடந்த காங்கிரசை தனது தோள் மீது தூக்கி வைத்து தாங்கியவர் சோனியா.. 10 வருஷம் அதற்காக அவர் காட்டிய முனைப்பும், அக்கறையும் ஏராளமானவை.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நடத்துவதற்கு முதுகெலும்பாகவும் இருந்தவர். ஆனால் இன்று அவர் கண் முன்பாகவே காங்கிரஸ் கலகலத்துக் கொண்டுள்ளது.

அவருக்கு சில வருஷங்களாகவே உடம்பு சரியில்லை.. எப்போதாவதுதான் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்.. அப்படி எந்த கூட்டத்தில் சோனியா பேசினாலும் சரி, அல்லது தன்தரப்பு கருத்தை எடுத்து வைத்தாலும் சரி, மத்திய பாஜகவை நேரடியாக அட்டாக் செய்துவிடுகிறார்.

முணுமுணுப்புகள்

முணுமுணுப்புகள்

ஆனால் ராகுல்காந்தி அப்படி இல்லை.. கருத்துக்களை சொல்கிறார்.. ஆனால் அது பிரதமருக்கு எதிரான கருத்தாக மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய, எதிர்தரப்புக்கு கிலியை தரக்கூடிய, கருத்தாக இருப்பதில்லை...அப்படியே பேசினாலும் இவரது பேச்சை யாரும் காது கொடுத்து கேட்பதும் இல்லை. கட்சிக்குள்ளேயே ராகுலுக்கு எதிரான முணுமுணுப்புகளும் உள்ளன.

முணுமுணுப்புகள்

முணுமுணுப்புகள்

ஆனால் ராகுல்காந்தி அப்படி இல்லை.. கருத்துக்களை சொல்கிறார்.. ஆனால் அது பிரதமருக்கு எதிரான கருத்தாக மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய, எதிர்தரப்புக்கு கிலியை தரக்கூடிய, கருத்தாக இருப்பதில்லை...அப்படியே பேசினாலும் இவரது பேச்சை யாரும் காது கொடுத்து கேட்பதும் இல்லை. கட்சிக்குள்ளேயே ராகுலுக்கு எதிரான முணுமுணுப்புகளும் உள்ளன.

குஷ்பு

குஷ்பு

தலைமை இவ்வாறு இருப்பதால், பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியிலும் இருந்து வருகிறார்கள்.. மம்தா பானர்ஜியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா வரை எத்தனையோ மூத்த தலைகளை காங்கிரஸ் இழந்தும் அது தன் போக்கை மாற்றிக் கொள்ளவும் இல்லை... இப்போது கட்சியில் சேர்ந்த குஷ்புகூட எத்தனையோ முறை கட்சி மீதான தன் வருத்தத்தை, தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.. அன்றே சரத் பவார் முதல் மம்தா வரை நழுவ விடாமல் இறுக்கி பிடித்துவைத்து கொண்டிருந்தால், பல மாநில தலைவர்கள் இன்றும் காங்கிரஸில் இருந்திருப்பார்கள்.

ஜெகன்மோகன்

ஜெகன்மோகன்

குறைந்தபட்சம் ஆந்திராவை பிடித்து வைத்திருந்திருக்கலாம்.. ஜெகன் மோகனிடம் பொறுப்பை தந்திருந்தால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸை தொடங்கியிருந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.. இப்போது தெலுங்கானா, ஆந்திரா என்று மொத்த செல்வாக்கையும் இங்கே இழந்துவிட்டது காங்கிரஸ்!

பலவீனம்

பலவீனம்

இதையடுத்து தொடர்ந்து சந்தித்த தேர்தல்களில் தோல்விகள் மேலும் கட்சியை பலவீனமாக்கிவிட்டது.. காங்கிரஸ் தன் கோட்டைகளை கோட்டை விட்ட சமயங்களில் எல்லாம் பாஜக வீறுகொண்டு எழ ஆரம்பித்துவிட்டது.. அதன் சித்தாந்தங்களையும் வலுவிழக்க செய்ய முடியாமல் திணறி வருகிறது.. எப்போமே ஜனநாயகத்தை நாங்கள்தான் பெற்றுதந்தோம் என்று அடிக்கடி சொல்லும் காங்கிரஸ், இனியும் அப்படி சொல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

தலைமை பண்பு

தலைமை பண்பு

நாளடைவில் இது இன்னும் மோசமடையவே செய்யும். இதை சரிபடுத்த உடனடியாக தலைமை முனைய வேண்டும்.. அனுபவம் வாய்ந்த சோனியாவால், தீவிரமாக அவரால் பணியாற்ற முடியாத நிலை.. ராகுல்காந்தியால், இளையவர்களையும் சமாளிக்க முடியவில்லை. பெரியவர்களையும் சமாளிக்க முடியவில்லை... மேலும் தீவிர அக்கறை காட்டாமலும் இருக்கிறார்.

வாரிசு பிரச்சனை

வாரிசு பிரச்சனை

அதனால், இதற்கெல்லாம் ஒரே வழி, முழு நேரத் தலைவர் தேவை.. களப்பணியில் இறங்கி வேலை செய்பவர் தேவை.. மூத்த தலைவர்களின் அறிவுரைகளை, கையாண்டு இளையவர்களை வழிநடத்த வேண்டிய ஒரு தலைவர் தேவை.. எல்லாவற்றிற்கும் மேலாக மாநிலங்களில் வாரிசு பிரச்சனை மற்றும் சீனியர் & ஜுனியர் இடையே எழும் இடைவெளியை குறைக்க வேண்டும்.. இவர்களுக்குள் இணக்கமான போக்கு ஏற்பட வேண்டும்... வேகவேமாக பதவியை பிடிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுதல் வேண்டும்.

நம்பிக்கை

நம்பிக்கை

ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஸ்திரப்படுத்த வேண்டும்.. அதன்பிறகுதான் பாஜகவை எதிர்த்தால்தான் காங்கிரஸ் மீது மக்களுக்கும் நம்பிக்கை வரும். இல்லாவிட்டால் தலைவர்கள் அங்கங்கே பிய்த்துக் கொண்டு போனால் மக்களிடம் இருக்கும் நம்பிக்கையும் போய் விடும். பாஜகவுக்கும் கட்சியை உடைப்பது எளிதாகி விடும்... நாளை பாஜக விஸ்வரூபமெடுத்து நின்றால், அது முழு முதல் காரணமாக காங்கிரஸ் தான் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது!

English summary
sonia gandhi: The Congress party needs to be further strengthened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X