• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கலக்கிய சோனு சூட்.. கப் சிப் உச்ச நட்சத்திரங்கள்.. கட்-அவுட் வைக்க மட்டும் தமிழர்கள் போதுமா?

Google Oneindia Tamil News

சென்னை: கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்தித்தவேளை, சந்திரமுகி, ஒஸ்தி, சாகசம், தேவி, தேவி2 உள்ளிட்ட படங்களில் நீங்கள் சோனு சூட்டை பார்த்திருப்பீர்கள்.

ஜோதா அக்பர் திரைப்படத்தில், ஜோதாபாய் ஐஸ்வர்யா ராயின் உடன்பிறவா அண்ணன் சுஜாமல் கதாப்பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர்.

ஆனால், மேலே குறிப்பிட்ட படங்களில் ஜோதா அக்பர், தேவி, சந்திரமுகி படங்களை தவிர்த்துவிட்டு, பிற படங்களில் அவர் நடித்ததை நெற்றிப்பொட்டை சுறுக்கி யோசித்தால்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் ஹிந்தி திரைப்படங்களில் சோனு சூட்டுக்கு நல்ல பெயர் உள்ளது.

அதிமுக ஐ.டி.விங்கில் பொறுப்புகள்... ஆன்லைன் மூலம் திறனாய்வு தேர்வு... அதற்கு பிறகே பொறுப்பு அதிமுக ஐ.டி.விங்கில் பொறுப்புகள்... ஆன்லைன் மூலம் திறனாய்வு தேர்வு... அதற்கு பிறகே பொறுப்பு

உதவிகள்

உதவிகள்

இருப்பினும், மனிதர், மொழி பேதம், அல்லது ஆதாயம் பார்ப்பது கிடையாது. உதவி என்று வந்துவிட்டால், வரிந்துகட்டி களத்திற்கு வந்துவிடுகிறார். அப்படித்தான், கிர்கிஸ்தானில் சிக்கி தவித்த மாணவர்களை தாய்நாடு அழைத்துவர உதவினார். இப்போது, ரஷ்யாவில் தவித்த 1 டெல்லி மாணவர் மேலும் 90 தமிழக மாணவர்களை அழைத்துவர தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

தமிழக மாணவர்கள்

தமிழக மாணவர்கள்

ரஷ்யாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., படித்து வந்த தமிழக மாணவர்கள் 100 பேர், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவுக்கு, விமான போக்குவரத்து இல்லாததால், நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டுள்ளார். மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட விமானம், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தது.

சீட்களை புக் செய்த சோனு சூட்

சீட்களை புக் செய்த சோனு சூட்

"இந்த விமானத்தில் 200 பயணிகள் உட்காரும் அளவுக்கு இருக்கைகள் இருந்தன. நாங்கள் டெல்லியைச் சேர்ந்த ஒரு மாணவர் உட்பட 101 மாணவர்கள் மட்டுமே இருந்தோம். தனியார் விமான நிறுவனம் இதற்காக சிறப்பு விமானத்தை இயக்குமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், நடிகர் சோனு சூட் பிற காலி சீட்களுக்கான டிக்கெட் பணத்தை செலுத்தியதை நாங்கள் அறிந்தோம். முழு விமானத்தையும் முன்பதிவு செய்து எங்கள் பயணத்தை எளிதாக்கிவிட்டார் " என்று சென்னை மாணவர்களில் ஒருவரான சக்தி பிரியதர்ஷினி கூறினார்.

இ மெயில்

இ மெயில்

கிர்கிஸ்தானில் சிக்கித் தவித்த மாணவர்களுக்கு தாயகம் திரும்ப சோனு சூட் உதவிய செய்திகளைப் பார்த்தோம். எனவே ஜூலை 23 அன்று சோனு சூட்டுக்கு மின்னஞ்சல் அனுப்பி உதவி கேட்டோம். உடனே சோனு சூட் அலுவலகம் மாணவர்களைத் தொடர்புகொண்டு விமானத்திற்கு ஏற்பாடு செய்தது என்று தெரிவித்தார் மற்றொரு மாணவர். அவர் முகத்திலும், அவர்கள் பெற்றோர் முகத்திலும் அத்தனை சந்தோஷம் தெரிகிறது.

உரிமையோடு உதவி

உரிமையோடு உதவி

இங்குதான் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். சோனு சூட் தமிழில் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அல்ல. பிற வேடங்களிலும் அதிக படங்களில் நடித்தவரும் கிடையாது. விரல் விட்டு எண்ணும் அளவுக்கான படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார். ஆனால், அவர் தனது சொந்தப் பணத்தை செலவிட்டு, தமிழக மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார். தமிழக மாணவர்களும், அவரிடம்தான் உரிமையாக மின்னஞ்சல் அனுப்பி உதவி கேட்டுள்ளனர்.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

2004ம் ஆண்டு, சுனாமி தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியபோது, விவேக் ஓபராய் செய்த உதவிகளை மறக்க முடியாது. அவரும் தமிழ் பட உலகில் நட்சத்திர வானில் ஜொலிக்காதவர்தான். ஹிந்திதான் அவரது தாய் வீடு, களம் எல்லாம். வெளிநாடுகளில் தமிழ் மாணவர்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், சோனு சூட் செய்துள்ள உதவி, நமது ரசிகர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

உச்ச நட்சத்திரங்கள்

உச்ச நட்சத்திரங்கள்

"ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா.." என்று வருவாய் ஈட்டி, உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர்கள் ஏன் தமிழ் மாணவர்களுக்கு உதவ முன்வரவில்லை? அவர்தான் பண்ணைவீட்டில் வாக்கிங் செய்வதில் பிஸியாக இருக்கிறார் என்றால், அடுத்தகட்ட இளம் நட்சத்திரங்களும் இந்த இளம் தலைமுறை மாணவர்களுடன் தொடர்பற்று போனது ஏன்? சமூக வலைத்தளங்களில், யார் பெரிய நடிகர், யார் நடித்த படத்திற்கு அதிக வசூல் குவிந்தது என நாளெல்லாம் சண்டைபோடுவது இதே இளம் தலைமுறைதானே. சண்டைபோட தேவைப்படும் இவர்களுக்கு ஒரு தேவை எனும்போது, உதவ மட்டும் அந்த நடிகர்களும் முன்வராதது ஏன்?

சண்டைக்கு ஆள் தேவை

சண்டைக்கு ஆள் தேவை

நமக்கு உதவிய நடிகர்களுக்கு தமிழன் கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்தது கிடையாது. பத்தோடு இதுவும் ஒரு படம் என்றுதான் கடந்து செல்கிறான். ஆனால், கண்ணை மூடிக் கொண்ட நடிகர்கள் படங்களுக்குத்தான், 3 நாளில் 100 கோடி, 10 நாளில் 200 கோடி என தயாரிப்பாளரைவிடவும், மெனக்கெட்டு, அக்கறைப்பட்டு டுவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு முட்டுக்கொடுக்கிறான் அப்பாவி ரசிகன். வசூலித்ததில் ஒரு சதவீத பணத்தை ஒதுக்கி கூட உதவி செய்ய நட்சத்திரங்கள் தயாரில்லையே என்ற கேள்வி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்குமே எழுகிறது.

சொற்பம்

சொற்பம்

போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சில உதவிகளையோ அல்லது உதவியே செய்யாவிட்டாலும், உதவி செய்வதை போல சமூக வலைத்தளங்களில் மட்டும் காட்டும், இந்த நடிக 'ஐடி விங்குகள்' சோனு சூட் போன்றோர் களத்தில் இறங்கி செய்யும் இதுபோன்ற உதவிகளை பற்றி கவலையேப்படாமல் இருப்பது, கவனிப்போருக்கு கவலையை ஏற்படுத்துகிறது. சூர்யா போன்று களத்தில் இறங்கி உதவும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இங்கு. ஆனால் அவர்களெல்லாம் மிக சொற்பமாக இருப்பதுதான் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையை உருவாக்குகிறது.

English summary
Sonu Sood is not an actor who plays the role of a hero in Tamil. There are no other roles in more films. He has only acted in films that can be counted off by the finger. But, he has spent his own money and helped Tamil Nadu students. Tamil Nadu students have also e-mailed him and asked for help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X