• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் தலைவர்! விஜயதரணி Vs ஜோதிமணி! சத்தியமுர்த்தி பவனில் கச்சேரி ஆரம்பம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பெண் ஒருவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதால் இப்போதே சத்தியமூர்த்தி பவனில் கச்சேரி களைகட்டத் தொடங்கியுள்ளது.

  Vijayadharani VS Jothimani | Tamil Nadu Congress Committee-க்கு பெண் தலைவர் | #Politics

  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் உட்கட்சித் தேர்தல் ஜூன் 10-ம் தேதி முதல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

  3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!

  இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விவகாரத்தில் சோனியா மற்றும் ராகுலிடம் மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளதால் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

  காங்கிரஸ் தலைவர்

  காங்கிரஸ் தலைவர்


  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி தனது பதவிக்காலத்தை
  முழுமையாக நிறைவு செய்துவிட்டார். இருப்பினும் அவரை உடனடியாக மாற்ற
  விரும்பாத கட்சி மேலிடம் அழகிரிக்கு பதவி நீட்டிப்பு செய்தது. இதனிடையே
  இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால்,
  காங்கிரஸை தமிழகத்தில் வலிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் அக்கட்சியின்
  மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது.

  பலருக்கும் ஆசை

  பலருக்கும் ஆசை


  இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை இப்போதே கொண்டு வந்தால்
  தான் அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்குவதற்கு சரியாக
  இருக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், மீண்டும் திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்காக காய் நகர்த்தி வந்த நிலையில் அவர்களுக்கு
  அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார் காங்கிரஸ்
  இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி.

  பெண் ஒருவர்

  பெண் ஒருவர்


  தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு பெண் ஒருவரை தலைவராக கொண்டு வரும் திட்டத்தில்
  உள்ள டெல்லி மேலிடம், அது தொடர்பான பெயர் பரிசீலனைகளை கூட
  தொடங்கிவிட்டதாம். தமிழக பாஜகவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் தலைவராக
  இருந்ததை போல் தமிழக காங்கிரசுக்கு விஜயதரணியோ அல்லது ஜோதிமணி எம்.பி.யோ
  தலைவராக வரக்கூடும் என கதர்ச்சட்டையினர் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.

  தைரியம்

  தைரியம்

  விஜயதரணியை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர்.
  அதுமட்டுமல்லாமல் துணிச்சலாக அரசியல் செய்யக்கூடியவர் என்பதால் சோனியாவின்
  சாய்ஸாக இருக்கிறார். இதனிடையே விஜயதரணிக்கு எதிரான புகார்களை ஒரு
  தரப்பினர் டெல்லிக்கு பறக்கவிடுவதால் அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்
  எனத் தெரிகிறது. இதேபோல் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயரத்துக்கு
  வந்தவர் ஜோதிமணி எம்.பி. கை சுத்தமானவர், யாரிடமும் நயா பைசா
  எதிர்பார்க்காதவர். மொத்தத்தில் நேர்மையான அரசியலை நெஞ்சில் நிறுத்தி இயங்கி வருபவர்.

  இரண்டு பேரும்

  இரண்டு பேரும்


  இப்படி இரண்டு பேருக்குமே பல்வேறு நிறைகள் இருந்தாலும் அவர்களை கடந்து
  இன்னும் ஒரு சில பெண் பிரமுகர்களும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை குறி
  வைத்து காய் நகர்த்த ஆரம்பித்துள்ளனர். இதனால் இப்போதே சத்தியமூர்த்தி
  பவனில் கச்சேரி களைகட்டத் தொடங்கியுள்ளது.

  கே.எஸ்.அழகிரி

  கே.எஸ்.அழகிரி

  சோனியா, ராகுல் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடையே கே.எஸ்.அழகிரியின்
  செயல்பாடுகள் பாராட்டை பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது. தமிழக சட்டமன்றத்
  தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பெருவாரியான வெற்றியால் கே.எஸ்.அழகிரி மீது
  கட்சி தலைமை வைத்த நம்பிக்கை குறையவில்லையாம். இருப்பினும்
  கே.எஸ்.அழகிரியின் வயது, பாஜக அண்ணாமலையின் தடாலடி அரசியல் உள்ளிட்ட சில
  காரணங்களால் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம்
  எனத் தெரிகிறது.

  English summary
  Soonly a woman will be the President of the Tamil Nadu Congress Committee
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X