சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 தான் தருவோம்.. என்னங்க இது 20 கொடுங்க.. நெருக்கும் பாமக.. மறுக்கும் அதிமுக.. செம போட்டி!

அஇஅதிமுகவிடம் சேர்மன் பதவிகளுக்கு மல்லுகட்டி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: நாள் ஆக ஆக.. அதிமுக கூட்டணியில் விரிசலும், பூசலும் அதிகமாகி கொண்டே வருகிறது.. உள்ளாட்சி தேர்தல் சீட் விவகாரம் முடிந்து இப்போது சேர்மன் பதவி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமகவும், பாஜகவும் கணிசமான இடங்களை கேட்டனர்.. ஆனால், இவ்வளவுதான் தர முடியும், அதற்கு மேல் முடியாது என்று ஓபனாகவே அதிமுக சொல்லி.. சில தொகுதிகளையும் ஒதுக்கியது.

அப்போதே விரிசல் ஆரம்பமானது.. பாமக தரப்பில் முணுமுணுப்புகள் ஆரம்பமாயின.. இறுதியில் அதிமுக - திமுக சமநிலை வெற்றியை பெற்றன.

கவுன்சில்கள்

கவுன்சில்கள்

அதன்படி தலா 13 மாவட்ட கவுன்சில்களை அதிமுகவும், திமுகவும் பெற்று.. அந்த 13 சேர்மன் பதவிகளையும் இருதரப்பிலும் தக்க வைத்துள்ளனர். இதே போல் 315 ஒன்றிய கவுன்சில் சேர்மன் பதவிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

சேர்மன் பதவி

சேர்மன் பதவி

மறைமுகத் தேர்தலில் அதிக அளவு சேர்மன் பதவிகளை கைப்பற்ற அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், அதனால் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் மற்றும் ஒன்றிய குழு சேர்மன் பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்க அதிமுக முடிவு செய்து, அதற்கான பேச்சுவார்த்தைக்கு பாஜக, பாமக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது.

பாமக

பாமக

பாமக சார்பில் கட்சி தலைவர் ஜிகே மணி, துணைப்பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி வருகை தந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.. எடப்பாடியார், ஓபிஎஸ்ஸை அவர்கள் சந்தித்தனர். மறைமுக உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் ஆதரவு தரும்படி கோரிக்கையும் விடுத்தனர்.

இடப்பங்கீடு

இடப்பங்கீடு

குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமகவிற்கான இடப்பங்கீடு குறித்தும் பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையின்போது கேட்டுக் கொண்டனர். ஆனால், இதில் ஒரு முடிவும் எட்டப்பட்டவில்லை.. பாமகவுக்கு எத்தனை சேர்மன் பதவிகள் என்பதும் இறுதியாகவில்லை.. பாமக 20 கேட்கிறதாம், ஆனால் அதிமுக 10தான் தர முடியும் என்று சொல்கிறதாம்.. ஏனென்றால் தேமுதிகவுக்கும் பிரித்து தர வேண்டும் என்ற நிலை அதிமுகவுக்கு உள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பாமகவாவது பேச்சுவார்த்தைக்கு வந்து போனது.. பாஜக வரவே இல்லையாம்.. எப்படியும் அதிகமாகத்தான் அக்கட்சி கேட்கும் என்று எதிர்பார்க்கும் என்கிறது அதிமுக தரப்பு.. ஆனால், பெரும்பாலான இடங்களில் பாஜகவிற்கு ஒன்றிய கவுன்சிலர்களே இல்லாதபோது, ஏன் போய் அதிமுகவிடம் பேச வேண்டும் என்று பாஜக நினைப்பதாகவும் ஒரு எண்ணம் இருக்கிறதாம்.

எது எப்படியோ.. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலால்.. அதிமுக கூட்டணிக்குள் புகைச்சல் அதிகமாகி வருவதுடன் விரிசலும் பெரிதாகி வருகிறது என்று மட்டும் தெரிகிறது!

English summary
sources say that aiadmk ignored bjp in chairman seat issues, and pmk demand more seats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X