• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சர்ச், மசூதி, தேவஸ்தான விவகாரம்.. சிவக்குமார் குடும்பத்தை.. மொத்தமாக இழுக்க மெகா கட்சி செம திட்டம்?

|

சென்னை: சத்தமில்லாமல் ஒரு சமாச்சாரம் கசிந்து வருகிறது.. நம்பகத்தன்மை இல்லாத தகவல் என்றாலும் இது சற்று யோசிக்க வைப்பதாகவே உள்ளது.. நடிகர் சிவக்குமார் உட்பட அவரது குடும்பத்தை ஒரு பெரிய கட்சி தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. கோயில் விவகாரம் ஜோதிகா பேசியதில் இருந்தே இப்படி ஒரு எண்ணம் அந்த மெகா கட்சிக்கு இருக்கிறதாம்!

சமீபத்தில் 2, 3 விஷயங்கள் சிவக்குமார் குடும்பத்திலே நடந்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.. அதில் ஒன்று ஜோதிகா கோயில் விவகாரம் குறித்து பேசியது.

 sources say that, attempts are made to bring actor sivakumars family into the Mega party

"சர்ச், மசூதியையும் சேர்த்து சொல்லி இருக்க வேண்டியதுதானே, அது ஏன் கோயிலை மட்டும் சொன்னார்" என்று ஒரு தரப்பினர் கொந்தளித்தனர்.. ஜோதிகாவின் பேச்சுக்கு, அடுத்த ஓரிரு நாளில் சூர்யாவும் ஆதரவு தெரிவிக்க இதை நாத்திகவாதிகள் வரவேற்றனர்.

அடுத்துதான் சிவக்குமாரின் தேவஸ்தான பிரச்சனை வெடித்தது.. சிவக்குமார் குறிப்பிட்டு சொல்வது யாரை, சொல்றதையெல்லாம் இவர் கண்ணால் பார்த்தாரா? என்று கேள்விகளை கேட்டு சோஷியல் மீடியாவில் ஒரு குரூப் கொந்தளித்தது. ஜோதிகாவுக்கு சர்ச்சை கொடிகள் காட்டியவர்கள்தான் சிவக்குமார் விவகாரத்துக்கும் பொங்கி எழுந்தனர்.

  நடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார் | Breaking

  ஏற்கனவே சூர்யா ஒருமுறை பேசும்போது, "நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஏற்கனவே நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.. புதிய வரைவுக் கொள்கை பற்றி பல கேள்விகளை முன் வைத்து இதையெல்லாம் நாம் ஏன் பேசுவதில்லை" என்றார்.. இதற்கே சூர்யா பேசியது வன்முறையத் தூண்டும் வகையில் உள்ளது என்று வரிந்துகட்டிக் கொண்டு வந்து எதிர்த்தது அந்த தரப்பு!

  இது எல்லாவற்றிற்கும் மேலாக கார்த்தி ஆல்வேஸ் விவசாயிகளின் தோழனாகவே உள்ளார்.. நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்த இவர் சென்றதில் இருந்தே அது விளங்கி வருகிறது. ஆக மொத்தம் சிவக்குமார் குடும்பத்தினர் இப்படி பேசியது எல்லாமே சர்ச்சையாக்கப்பட்டது.. கண்டிக்கப்பட்டது.. விமர்சனம் செய்யப்பட்டதே தவிர, இவர்கள் செய்ததும், பேசியதும் உண்மைதானா என்று மட்டும் உள்ளிறங்கி பார்க்கவில்லை.. அதில் உள்ள நியாயங்களையும் விமர்சித்தோரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றே இப்போதுவரை சொல்லப்படுகிறது.

  நொறுங்கிய இதயம்.. "ப்ளீஸ்.. 2 நிமிஷம்தானா.. முகத்தை ஒருமுறை காட்டுங்க.. கதறிய ஆதிரா.. கேரள கொடுமை

  இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த குடும்பத்தை அப்படியே தங்கள் பக்கம் இழுக்க ஒரு மெகா கட்சி கணக்கு போட்டு வருகிறதாம்.. இவர்களின் செல்வாக்கையும், ஆதரவையும் அப்படியே ஓட்டாக மாற்றினால் அது தங்களுக்கு பலம் என்றும் கருதுகிறதாம்.. அதற்கான அழைப்பைகூட விடுக்க தயாராகி வருவாக கூறப்படுகிறது.

  ஆனால், சிவக்குமார் குடும்பத்தை பொறுத்தவரை, எதையும் அரசியல் லாபத்துக்காக பேசவில்லை.. அந்த உணர்வுகள் எல்லாம் தானாக வந்தவை.. யதேச்சையாக வெளிப்படுத்தவை. அந்தந்த சூழ்நிலைகளில் கையாளப்பட்டவை.. எனினும், அரசியல் பக்கம் இந்த குடும்பமே வந்தால் வீட்டில் இருக்கும் 4 பேரின் ரசிகர்களின் ஓட்டுக்களையும் லட்டு போல அள்ளலாம் என்று அந்த மெகா கட்சி திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரபரக்கின்றன.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  sources say that, attempts are made to bring actor sivakumars family into the Mega party
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X