சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர் பிளானில் பாஜக.. சுப்ரீம் நம்பிக்கையில் பாமக.. ஓரம் கட்டும் அதிமுக.. அசராத கூட்டணி கட்சிகள்!

பாமக - பாஜக இணைந்து அதிமுகவுக்கு எதிரான வியூகங்களை எடுப்பதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    'Muslims Needn't Worry': Amit Shah In Parliament On Citizenship

    சென்னை: போற போக்கை பார்த்தால் அதிருப்திக்கு உள்ளாகி வரும் பாமகவும் பாஜகவும் ஒன்று சேர்ந்து.. அதிமுகவை ஓரங்கட்டி விடுமோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது!

    9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.. இதையடுத்து தீவிரமான தேர்தல் பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன!

    திமுக தரப்பு ஒரு பக்கம் சுப்ரீம் கோர்ட்டை நாடினாலும், இன்னொரு பக்கம் மும்முரமான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதில், அதிமுகதான் படு பிஸியாக உள்ளது.. இக்கட்சியின் கூட்டணிகள் அதிகம் என்பதால், பேச்சுவார்த்தைகளும் நிபந்தனைகளும் வேண்டுகோள்களும் நிறையவே முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    பாஜகவின் முக்கிய தலைவரை சந்தித்த நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு.. கோவிலில் நடந்த பரபர சம்பவம்! பாஜகவின் முக்கிய தலைவரை சந்தித்த நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு.. கோவிலில் நடந்த பரபர சம்பவம்!

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    அந்த வகையில் பாமக, பாஜக என இந்த இரண்டு கட்சிகளும் அதிருப்தியில் திளைத்து காணப்படுகின்றன. கேட்ட சீட்டுகளின் சதவீதமும் கிடைக்காமல், கேட்ட தொகுதிகளும் கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த இரு கட்சிகளும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிந்தும், அதிமுக தன் பிடிவாத போக்கிலேயே இன்னமும் நீடிப்பதாக கூறப்படுகிறது.

    பட்டியல்

    பட்டியல்

    பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்றால், கூட்டணி தலைமை பிரித்து தருவதைதான் கட்சிகள் வாங்கி கொள்வது இயல்பாக இதுவரை நடந்து உள்ளது.. அந்த வகையில் இப்போதும் அதிமுக கையில்தான் முடிவுகள் உள்ளன... மேலும் வேட்பாளர் பட்டியலையும் அதிமுகதான் தயார் செய்து வருகிறதாம்.. இந்த லிஸ்ட்டில் உள்ளவர்களும் பெரும்பாலும் அமைச்சர்களின் சாய்ஸ்தானாம்.. இந்த லிஸ்ட்டை வைத்து கொண்டுதான், கூட்டணி கட்சிகளுக்கு மற்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    அதிமுகவின் இந்நடவடிக்கைகளினால், பாமக - பாஜக இன்னமும் கடுப்பில் உள்ளதாக சொல்கிறார்கள். அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுங்கள் என்று நேரடியாகவே பாமக, பாஜக தலைமையிடம் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டதாம். ஏற்கனவே, பாமகவுக்கு பாஜகவிடம் நல்ல இணக்கமான போக்கு உள்ளது.. அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அன்றே டெல்லிக்கு சென்று முகாமிட்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற, கோரிக்கை வைத்தது.. இதுபோலவே தேமுதிகவும் சுதீஷுக்கு எப்படியாவது பதவி வேண்டும் என்று கேட்டு தன் செல்வாக்கை பயன்படுத்தியது.

    கோரிக்கை

    கோரிக்கை

    கூட்டணி தலைமை மூலமாக கோரிக்கை விடுவதைவிட, நேரிடையாகவே பாஜகவிடம் அணுகுவதற்கான தனிப்பட்ட செல்வாக்கு பாமக-வுக்கு எப்போதுமே உள்ளது. அதனால்தான்.. அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்டு வருகிறது.

    காரணங்கள்

    காரணங்கள்

    இதை பாஜகவும் இந்த கோரிக்கை குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளதாம்.. ஏனென்றால், பாமகவுக்கு தமிழகத்தில் நல்ல வாக்கு வங்கியும், செல்வாக்கும் இருப்பதை கடந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி உள்ளன. அதனால், பாமகவுடன் இணைந்து செயல்பட பாஜக விரும்பவே செய்யும்.. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

    திமுக-அதிமுக

    திமுக-அதிமுக

    ஒருவேளை ரஜினி அதற்குள் கட்சியை தொடங்கிவிட்டால் அவரையும் தங்களோடு இணைத்து வலிமையான கூட்டணியை உருவாக்கி... அதிமுகவை ஓரங்கட்டலாம் என்றும் ஐடியா உள்ளதாம்.. உள்ளாட்சி தேர்தலில் பாமக, பாஜகவை அதிமுக சற்று தள்ளி வைப்பது.. வருங்கால அரசியலுக்கு நல்லதா, கெட்டதா என தெரியவில்லை.. ஆனால், பாமக-பாஜக ஒன்றுகூடி அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவெடுக்கும் வியூகங்களை எடுத்து வருவதாக கூறப்படுகிறது!

    English summary
    Local body election in Tamilnadu: PMK and BJP is said to be taking strategies against the AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X