சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொங்கு மண்டலத்தை அப்படியே.. கொக்கி போட்டு தூக்கிடணும்.. ஸ்கெட்ச் போடும் பிகே.. திகைப்பில் அதிமுக!

கொங்கு மண்டலத்தை பிகே டீம் குறி வைக்கிறதா?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை குறி வைத்து திமுக அடுத்த வியூகத்தை தொடர்ந்துள்ளது.. இது அதிமுகவினருக்கு விடப்படும் சவாலாகவும் பார்க்கப்படுகிறது!

கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

பொதுவாக கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.. அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் எம்ஜிஆர் ரசிகர்களும்கூட... அதனால்தான் அங்கு அதிமுக வெற்றி என்பது இவ்வளவு காலமாக எளிதாக நடக்கக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

எம்ஜிஆருக்கு பிறகு கொங்கு மண்டலத்தை தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டு வைத்திருந்தார் ஜெயலலிதா..போன சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 61 அதிமுகவினர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்கள்.. இதுதான் அதிமுக ஆட்சி அமையவும் முக்கிய காரணமாகவும் இருந்தது.. இதற்கு பிறகுதான் எடப்பாடியார் முதல்வராக வர நேர்ந்தது.. இதுநாள் வரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை.

செல்வாக்கு

செல்வாக்கு

எடப்பாடியார் மட்டுமில்லை.. முக்கிய அமைச்சர்களான செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, தங்கமணியை தந்ததும் இதே கொங்கு மண்டலம்தான்.. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழைய செல்வாக்கு அங்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. அதேசயம் திமுக அந்த செல்வாக்கை தன் பக்கம் மொத்தமாக திருப்பி கொள்ளவும் இல்லை. நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலிலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுகவுக்கு 456 இடங்கள் கிடைத்தன.

வெற்றி

வெற்றி

திமுகவுக்கு 446 இடங்கள் கிடைத்துள்ளன. இதுவே திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றிதான். அதாவது ஜஸ்ட் 10 இடங்கள்தான் அதிமுகவை விட குறைவாக பெற்றுள்ளது திமுக.. திண்டுக்கல், நாமக்கல்லிலும் கணிசமான வெற்றியை பெற்றது. ஆஹா ஓஹோ என்ற வெற்றி இல்லாவிட்டாலும் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று கூற முடியாத அளவுக்கு அடித்தளத்தை தகர்த்து என்று சொல்லலாம்.. எனினும் இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியே... கஷ்டப்பட்டு மீண்டு வந்த கொங்கு மண்டலத்தை மேலும் சரிய விடாமல் தூக்கி பிடிக்கவே பிகே டீம் தற்போது முயன்று வருகிறதாம்.

கவுண்டர்கள்

கவுண்டர்கள்

கடந்த முறை சட்டமன்றத்தில் திமுக கூட்டணி 13 தொகுதிகளை மட்டுமே பிடித்த நிலையில், கொங்கு மண்டலத்தை கோட்டை விட்டது... சாதி வாரியாக பிகே டீம் இதுவரை இறங்கவில்லை.. அநேகமாக கொங்கு மண்டலத்தை நோக்கி குறி வைத்துள்ளது வாக்குக்கான முதல்படி என்றே சொல்லாம்.. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கவுண்டர்கள், அருந்ததியர்கள், நாயுடு சமூகத்தினர் என பரவலாக வசித்து வருகின்றனர்.

வியூகங்கள்

வியூகங்கள்

இவர்களின் வாக்குகளை அள்ளுவதற்காக என்னென்ன மாதிரியான வியூகங்களை கையில் எடுக்கலாம் என்று தீவிரமாக ஈடுபட்டு வருகிறதாம். கடந்த முறை பெற்ற வாக்கு சதவீதம், எதனால் திமுகவுக்கு சரிவு, கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் தற்போதைய மைனஸ் என்ன, அக்கட்சி சம்பந்தமான அதிருப்திகள் என்ன போன்றவை குறித்து போன்றவை குறித்தும் ரிப்போர்ட் தயாராகி வருவதாக சொல்கிறார்கள்.

எடப்பாடியார்

எடப்பாடியார்

அது மட்டுமல்ல.. சமீபத்தில் திமுக 3 பேருக்கு ராஜ்ய சபா உறுப்பினர்களாக அறிவித்ததில் அந்தியூர் செல்வராஜும் ஒருவர்.. இவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையாம்.. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே இது ஷாக் தானாம்.. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எடப்பாடியாரின் சமூகத்தினர் ஏராளமானோர் உள்ளனர்.. இவர்கள்தான் அதிமுகவின் வாங்கு வங்கியை நிர்ணயிப்பவர்கள். அதேபோல, இந்த சமூகத்துக்கு இணையாக இருப்பவர்கள் பட்டியலினத்தவர்கள்தான்.. அச்சமூக மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரவும், இதை வைத்து வரும் தேர்தலில் வாக்குகளை அள்ளவுமே அந்தியூர் செல்வராஜை முக ஸ்டாலின் முன்னிறுத்தியதாக சொல்கிறார்கள்.

பிகே டீம்

பிகே டீம்

இதன் பின்னணியில் பிகே-வும் இருப்பதாக சொல்லப்பட்டது. அதனால் தலித் வாக்குகளை ஒரு பக்கம் பெருவாரியாக அள்ளினாலும் இதர சமூகத்தினரின் வாக்குகளுக்குதான் இப்போது டார்கெட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. என்னதான் திமுக வியூகங்களை வகுத்து வந்தாலும் எடப்பாடியார் அத்தனையையும் பொடிப்பாடியாக்குவார் என்பதுதான் தற்சமய நிலவரமாக உள்ளது.. கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் திமுக தோற்றதற்கு காரணமே எடப்பாடியார் மீது கொங்கு மண்டல பகுதி திமுக மா.செ.க்கள், முக்கிய நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் அன்பு வைத்திருந்ததுதான் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அதிமுக கோட்டை

அதிமுக கோட்டை

இப்போது பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து முதல்வர் மாஸ் காட்டி வருகிறார். துவண்டுபோன காலத்திலேயே அதிமுகவை தூக்கி நிறுத்தியது இந்த கொங்கு மண்டலம்தான்.. அந்த வகையில், காலங்காலமாக அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் கொங்கு மண்டலத்தை எப்படியும் முதல்வர் விட்டுத்தர மாட்டார் என்றும், அதிமுகவின் கொடி மீண்டும் அங்கே பறக்கம் அடித்து சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

English summary
sources say that DMK is turning its attention to the kongu mandalam to get votes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X