சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் அந்த கருப்பு ஆடு.. ரஜினி பற்றின "ரிப்போர்ட்".. அதிர்ச்சியில் திமுக.. 50 சீட்டை குறைச்சிருச்சாம்

ரஜினியின் வருகை திமுகவுக்கு கலக்கத்தையே ஏற்படுத்துகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தரப்பின் ரகசியங்களை ரஜினிக்கு கசிய வைத்து கொண்டிருக்கும் அந்த கருப்பு ஆடு யார் என்று தெரியாத நிலையில், ரஜினியை பற்றின ரிப்போர்ட் ஒன்று, திமுக தரப்பை அதிர வைத்துவிட்டதாம்!

சில தினங்களுக்கு முன்பு திடீரென திமுக பக்கம் ரஜினிக்கு நெருக்கம் கூடியது.. திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட்டதற்கு ஊருக்கு முந்தி வாழ்த்து சொல்லி இருந்தார்.

ஆனால், இளைஞரணியின் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்ட போதும் சரி, கடந்த மார்ச்சில் ஸ்டாலினின் பிறந்த நாளின் போதும் சரி, இப்படி ஒரு வாழ்த்தை ரஜினி சொல்லவே இல்லை.. காரணமும் தெரியவில்லை... விநாயகர் சதுர்த்திக்குகூட வாழ்த்து சொல்லாத ரஜினி, இவர்களுக்கு வாழ்த்து சொன்னது பல தரப்பினரை ஆச்சரியப்பட வைத்தது.

ஏன் இந்த அவசரம்.. கோர்ட் நேரத்தை வீணடிப்பதா.. ரஜினிக்கு நீதிபதி கடும் கண்டனம்! ஏன் இந்த அவசரம்.. கோர்ட் நேரத்தை வீணடிப்பதா.. ரஜினிக்கு நீதிபதி கடும் கண்டனம்!

திமுக

திமுக

காரணம், ரஜினியை பொறுத்தவரை திமுகதான் முதல் எதிரியாக கருதுவதாகவும், திமுகவைத் தாண்டி வெல்ல வேண்டும் என்றால் அதை விட படு ஸ்டிராங்காக தாம் இருந்தாக வேண்டும் என்று அவர் உணர்ந்திருப்பதாக சொல்லப்பட்டது.. அதனால்தான் திமுகவின் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை உன்னிப்பாக ரஜினி கேட்டறிந்து வருவதாகவும் கூறப்பட்டது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

இதனிடையே கடந்த மாதம், இன்னொரு தகவலும் கசிந்தது.. அதாவது, திமுக பற்றின ஒரு சர்வே ரஜினி பார்வைக்குப் போனதாம்.. அந்த சர்வேயில் திமுகவின் செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு, மக்கள் கருத்து உள்ளிட்டவை குறித்து அனைத்தும் இருந்ததாம்.. அதைப் பார்த்த ரஜினி அப்படியே அயர்ந்து போய்விடும் அளவுக்கு சர்வே முடிவுகள் இருந்தனவாம். ஆனால், அந்த சர்வேயை திமுக தரப்பிலிருந்தே யாரோ ஒரு முக்கியப் புள்ளி ரஜினிக்கு கொடுத்ததாகவும் ஒரு டாக் ஓடியது. எனினும், திமுக தரப்பில் இருந்து கொண்டே, ரஜினிக்கு சாதகமான வேலையை செய்து தரும் அந்த கருப்பு ஆடு யார் என்பது இதுவரை தெரியவில்லை.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

இப்போது இதேபோல, இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. அது ரஜினியை பற்றி திமுக தரப்பில் தரப்பட்ட ரிப்போர்ட் ஆகும். அதாவது, ரஜினி கட்சியை ஆரம்பித்து, மெகா கூட்டணியையும் உருவாக்கி தேர்தலை சந்தித்தால், நிச்சயம் திமுகவுக்கு அது சற்று பலவீனமாகவே இருக்கும் என்றும், ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராட வேண்டி இருக்கும் என்று ஐபேக் தரப்பில், ஸ்டாலினிடம் சொல்லப்பட்டதாம்.. இதை கேட்டு லேசாக அதிர்ந்தாராம் ஸ்டாலின்.

கூட்டணி

கூட்டணி

அதுவரை 200 தொகுதிகளில் திமுக போட்டியிடலாம் என்ற யோசனையில் இருந்தவர், இப்படி ஒரு ரிப்போர்ட்டை கேட்டதுமே கூட்டணிகள் இல்லாமல் ஆட்சியை அமைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டாராம்.. எனவே எந்த கூட்டணி கட்சிகளும் அதிருப்தி அடையாதவாறு, சீட்டுகளை ஒதுக்கி அனுசரித்து போவதென்றும் முடிவு செய்தாராம்.

அறிக்கை

அறிக்கை

எனவே 200 தொகுதிகளுக்கு பதிலாக 150 தொகுதிகளில் திமுக போட்டியிடவும் யோசித்து வருகிறதாம்.. அதனடிப்படையில்தான் ஸ்டாலின் நேற்று முன்தினம் அந்த அறிக்கையும் விடுத்தாராம். அந்த அறிக்கையை பொறுத்தவரை, 200 தொகுதிகளில், திமுக போட்டியிடவில்லை என்பது தெளிவாகிவிட்டது.. அதேசமயம், காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்தியது

மெகா கூட்டணி

மெகா கூட்டணி

இவ்வளவிற்கும் காரணம் ரஜினியின் வருகையும், அதையொட்டிய மெகா கூட்டணியும்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்த தேர்தலை தவிர்க்குமாறு ரஜினிக்கு நெருக்கமான வெளிநாட்டு டாக்டர் நண்பர் மூலம், திமுக மறைமுகமாக வலியுறுத்தி இருந்தது.. எதையும் காதில் வாங்காத ரஜினி தொடர்ந்து கட்சியை தொடங்குவதில் உறுதியாக இருப்பது போல தெரிகிறது.

அதிமுக

அதிமுக

அதுமட்டுமல்ல, மெகா கூட்டணி என்றால், அந்த கட்சியில் யார் யார் இருப்பார்கள்? ஒருவேளை கூட்டணியில் உள்ள யாரேனும் ரஜினி பக்கம் தாவ வாய்ப்பு இருக்குமோ என்ற கலக்கமும் இருந்து கொண்டே இருக்கிறது.. அதேசமயம், ரஜினியை அதிமுக தரப்பு ஏன் கண்டும் காணாமல் இருக்கிறது என்ற சந்தேகமும் இங்கு எழுகிறது.. என்ன இருந்தாலும் கட்சியே துவங்காத ரஜினியை பார்த்து திமுகவும், பாரம்பரியம் மிக்க திமுகவை பார்த்து ரஜினியும் மிரள்வது அரசியலின் ஆச்சரியங்களாக உள்ளன!

English summary
Sources say that, DMK not want Rajini to join Assembly elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X