சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்?

திமுக கூட்டணி விரைவில் உடையும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN assembly elections 2021 | DMK to break with Congress

    சென்னை: மொத்தமாக திமுக கூட்டணி உடையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அந்த அளவுக்கு விரிசல்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன? அப்படியானால் வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகின்றன இந்த கூட்டணி கட்சிகள்?

    கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது என்ற கேஎஸ்.அழகிரியின் அந்த ஒத்த விமர்சனம்தான், ஒட்டுமொத்த கூட்டணியையும் காலி செய்யும் வரை செல்ல போகிறது போலும்!

    அழகிரி இப்போது சொன்னதைதான், போன வருஷமே கராத்தே தியாகராஜனும் சொல்லி இருந்தார்.. ஒருவேளை 'உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாம் தனித்தே போட்டியிடலாம்' என்று பேசபோய்தான்.. அதற்கு கே.என்.நேரு எதிர்வினை கருத்தினை தெரிவிக்க வேண்டி இருந்தது. பதிலுக்கு நேருவும் தனித்தே போட்டியிட வேண்டும் என்று சொல்லப்போய், கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யும்வரை விவகாரம் பெரிதானது.

     அடங்காமல் எரியும் துக்ளக் தீ.. பாஜக தேவையில்லை.. தனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி! அடங்காமல் எரியும் துக்ளக் தீ.. பாஜக தேவையில்லை.. தனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி!

    புகார்கள்

    புகார்கள்

    அப்போது நடந்ததற்கும், இப்போது நடந்து கொண்டுள்ளதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.. காங்கிரஸ் கட்சியின் பல மா.செ.க்கள் புகார்களை அடுக்கடுக்காக சொல்லவும்தான், இப்படி ஒரு முடிவுக்கு வந்ததாக அழகிரி தரப்பு சொல்கிறார்கள்.. அதுகூட திடுதிப்பென்று அழகிரி அறிக்கை விட்டுவிடவும்.. இது சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு பலமுறை முயன்றும்தான், அதில் முடிவு தெரியாமல் இப்படி ஒரு அறிக்கை விட வேண்டியதாயிற்றாம்.

    2 காரணங்கள்

    2 காரணங்கள்

    ஆனால், இந்த அறிக்கையை கொண்டே காங்கிரஸை ஒதுக்க திமுக முடிவு செய்ய 2 காரணங்கள் சொல்லப்படுகிறது.. கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேண்டும் என்கிற முடிவுக்கு திமுக, இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே வந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. எம்பி தேர்தலில் 38 இடங்களை திமுக வென்றாலும், இடைத்தேர்தலில் 2 இடங்களிலுமே மண்ணை கவ்வியது.. அதிலும் காங்கிரசின் மண் நாங்குநேரி தோல்வியை திமுகவால் ஜீரணிக்கவே முடியவில்லை.

    நெருக்கடி

    நெருக்கடி

    காங்கிரசுடன் முதல் நபராக கூட்டணி வைத்தும், அந்த கூட்டணிக்கு எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டுக்களை வாரி வழங்கியும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.. ஒருவேளை இதே கூட்டணி தொடர்ந்தால், திரும்பவும் காங்கிரஸ் நிறைய சீட் கேட்டு அடம் பிடிக்கும் என்பதை திமுக கணித்திருந்தது.. ஒருவேளை கேட்ட சீட்டை தர முடியாவிட்டால் டெல்லி லாபி மூலம் நெருக்கடி வருகிறது.. அதனால் போதுமான சீட்டுக்களை காங்கிரசுக்கே ஒதுக்கிவிடுவதால், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு போதுமான இடங்களை ஒதுக்க முடிவதில்லை.

    கமல்

    கமல்

    அது மட்டுமல்ல, தேர்தல் சமயங்களில் காங்கிரசின் ஒத்துழைப்பு திமுகவுக்கு குறைவாக கிடைப்பதாக கூறப்படுகிறது.. இதுபோக கோஷ்டி மோதல் வேறு.. இந்த கோஷ்டி பூசலால் கூட்டணியின் வெற்றி பாதிக்கிறது.. அதனால்தான் காங்கிரஸ் விஷயத்தில் அப்போதே திமுக தெளிவாக இருந்ததாம்.. இப்போது அழகிரி அறிக்கை விடவும், அதை கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டதாக கூறுகிறார்கள்.

    திருமாவளவன்

    திருமாவளவன்

    இதேநிலைதான் விசிகவுக்கும் ஏற்பட போகிறது.. எம்பி தேர்தலிலேயே பல கூட்டணியுடன் சிக்கல்களை அக்கட்சி சந்தித்தது.. கேட்ட தொகுதி கிடைக்காமல், கேட்ட சீட்டுகள் கிடைக்காமல், சின்னம் பிரச்சனையில் சிக்கி.. பல சர்ச்சை, சலசலப்புகளுடன்தான் தேர்தலை எதிர்கொண்டது. அதனால் காங்கிரஸின் நிலைமை விசிகவுக்கும் வரலாம் என்கிறார்கள். ஒருவேளை இந்த கூட்டணி உடைந்தால், கமல் போன்ற புதுமுகங்களை திமுக உள்ளே இழுக்க முயற்சிக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

    சிதம்பரம்

    சிதம்பரம்

    சிதம்பரம் ஒன்று சொல்ல.. துரைமுருகன் மறுகருத்தை சொல்ல.. கூட்டணி விரிசல் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது.. இன்னொரு பக்கம், ரஜினியை கணக்கு பண்ணி சிதம்பரம் காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள்.. தனிப்பட்ட முறையில் சிதம்பரம் மீது மரியாதை வைத்திருப்பவர் ரஜினி.. எப்படியும் ரஜினியை சட்டமன்ற தேர்தலுக்கு இணைத்து கொண்டால், விசிகவும் கண்டிப்பாக தங்களுடன் வருவார்கள் என்பதே சிதம்பரத்தின் திட்டமாக உள்ளதாம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. சிதம்பரம் போடும் கணக்கு சாத்தியமா? அல்லது திமுக போடும் கணக்கு சாத்தியப்படுமா என்பது இனிதான் தெரியவரும்.

    English summary
    sources say that DMK will break the alliance and p chidambaram is planning to get together with actor Rajini
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X