சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர்கள் வீடுகளுக்கு தினசரி 2 லாரி மெட்ரோ வாட்டர் போகுதாமே!

அமைச்சர்களின் வீடுகளுக்கு 2 லாரி குடிநீர் தினமும் செல்வதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Water scarcity: அமைச்சர்கள் வீடுகளுக்கு தினசரி 2 லாரி மெட்ரோ வாட்டர்- வீடியோ

    சென்னை: "அமைச்சர்கள் வசிக்கும் பங்களாக்களுக்கு தினசரி 2 லாரி தண்ணீர் போகிறது".. இதுதான் மெட்ரோ வாட்டர் தரப்பில் தற்போது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.

    இப்படி ஒரு நிலைமை சென்னைக்கு வரும்னு நினைச்சுகூட பார்க்கல. அங்கங்கே குடிக்கவே தண்ணி இல்லாம இருக்கோம். ஒரு குடம் தண்ணியை விலை கொடுத்து வாங்கும் நிலைமையும், அந்த ஒரு குடம் தண்ணிகூட கிடைக்காத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ரயில்ல நமக்கு தண்ணி கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் நிலைமையை ஏற்கக்கூடிய முடியவில்லை.

    தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீருக்கு தெருத்தெருவாக அலையும் நிலையில் சென்னையில் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் தினசரி 2 லாரி தண்ணீர் தாராளமாக சப்ளை செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை தான் அவர்களும், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் குளிக்க, துவைக்க, கழுவ, தோட்டங்களுக்கு நீர் பாய்ச்ச என இந்த தண்ணீரையே பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய டொனால்ட் டிரம்ப்

    ஆஸ்பத்திரிகள்

    ஆஸ்பத்திரிகள்

    இன்னொரு பக்கம் தண்ணி இல்லாமல், ஓட்டல்கள், விடுதிகள், ஐடி கம்பெனிகள் மூடப்பட்டு வருகின்றன. இதைவிட கொடுமை அரசு ஆஸ்பத்திரிகள் தண்ணி இல்லாமல் நாறிக் கொண்டிருக்கின்றன. அதனால ஒட்டுமொத்த சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் லாரி தண்ணியை எல்லோரும் நம்பி இருக்க வேண்டியதா இருக்கு. அதுக்கும் அடிதடி, தகராறு, தூக்கம், சாப்பாடு இன்றி தவிப்பது நடக்கிறது.

    பஞ்சம்

    பஞ்சம்

    இவ்வளவு நடந்தும், தண்ணீர் தட்டுப்பாடே இல்லை, அப்படி ஒரு மாயையை உருவாக்குகிறார்கள் என்றும், எல்லாரும் குடிநீரை குளிக்க, துவைக்க பயன்படுத்துவதால் தண்ணீர் பஞ்சம் என்றும் தமிழக அரசு தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.

    விஐபிக்கள்

    விஐபிக்கள்

    ஆனால் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீடுகளில் இப்படிப்பட்ட பஞ்சமே எட்டிப்பார்க்கவில்லை என்பதுதான் தகவல். இங்குள்ள குடியிருப்புகளில் வசிப்பது அமைச்சர்கள், விஐபிகள் போன்றவர்கள். 2 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களுக்கு லாரிகளில் தண்ணீர் சப்ளை என்றால், இந்த ஏரியாவில் மட்டும் தினமும் லாரி வந்துட்டு போகுதாம்.. அதுவும் 2 லாரி தண்ணீராம்.

    கார்கள்

    கார்கள்

    "இந்த விஐபிக்கள் வீட்டில் கட்டாயம் தோட்டம் உள்ளது.. வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது.. இவைகளை கழுவவும், குளிக்க, துவைக்க.. என ஏகப்பட்ட சமாச்சாரங்களுக்கு இந்த தண்ணி தேவைப்படுகிறது" என்று அந்த பகுதியில் உள்ள நபர்கள் சொல்கிறார்கள். ஒரு லாரி என்றாலே 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் என்றால் 2 லாரி என்றால் கணக்கு போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

    அவசியம்

    அவசியம்

    தண்ணீர் எல்லோருக்கும் அவசியம்தான். அமைச்சர்களாக இருந்தாலும் சரி, அதி சாதாரண மக்களாக இருந்தாலும் சரி. ஆனால் எல்லோருக்கும் கிடைத்தால் சந்தோஷம்தான்.

    English summary
    Water scarcity prevails throughout Tamil Nadu. It is reported that drinking water is being supplied daily in 2 trucks to ministers' homes in Greenways road
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X